தேவையான பொருட்கள்

வெண்டைக்காய் -250 கிராம்

பூண்டு -5 பற்கள்

சாம்பார்தூள் -11/2 கரண்டி

மஞ்சள்தூள் -1/2 கரண்டி

வெங்காயம் -1

தக்காளி -1

பச்சைமிளகாய் -2

கறிவேப்பிலை -சிறிது

புளிகரைசல் -1/4 கப்

தாளிக்க:

எண்ணை -2 கரண்டி

கடுகு -1/4 கரண்டி

உளுத்தம்பருப்பு -1/2 கரண்டி

கடலைபருப்பு -1/2 கரண்டி

வெந்தயம் -1/4 கரண்டி

சோம்பு -1/4 கரண்டி

செய்முறை

வெண்டைக்காயை கழுவி வட்டமாக நறுக்கிவைக்க வேண்டும். வெங்காயம், தக்காளி, மிளகாய் நறுக்கி வைக்க வேண்டும். பூண்டு தோலுரித்துவைக்க வேண்டும். பாத்திரத்தில் எண்ணை ஊற்றி தாளிக்கக் கொடுத்தவற்றை போட்டு தாளித்து வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை, பூண்டு போட்டு வதக்க வேண்டும். தக்காளி, வெண்டைக்காய் போட்டு வதக்க வேண்டும். காய் நன்கு வதங்கியவுடன் மஞ்சள்தூள், சாம்பார்தூள் போட்டு வதக்கி புளிகரைசல் ஊற்றி தேவையான தண்ணீர், உப்பு போட்டு கலக்கி மூடிபோட்டு வேகவிட வேண்டும். காய்வெந்து குழம்பு சிறிது கெட்டியானவுடன் உப்பு சரிபார்த்து இறக்க வேண்டும்.

Pin It