தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு - 250 கிராம்

பச்சை மிளகாய் - 3

எலுமிச்சம் பழம் - 1

மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி

பெருங்காயம் - அரை தேக்கரண்டி

பயத்தம் பருப்பு - அரை ஆழாக்கு

நெய் - ஒரு மேசைக்கரண்டி

சீரகம் - ஒரு தேக்கரண்டி

கறிவேப்பிலை - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை

பயத்தம் பருப்பை வெறும் வாணலியில் வாசனை வரும் வரை சிறிது புரட்டி எடுக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் பருப்பு மூழ்கும் அளவிற்கு சற்று அதிகமாக தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் பருப்பு மற்றும் மஞ்சள் தூள் போட்டு வேகவிட வேண்டும். உருளைக்கிழங்கினை தோல் சீவி, துண்டங்களாக நறுக்கி வேகும் பருப்புடன் சேர்க்க வேண்டும். அத்துடன் கீறிய பச்சை மிளகாய், பெருங்காயம், தேவையான உப்பு சேர்த்து நன்கு வேக விட வேண்டும்.

நீர் போதுமான அளவு இல்லையெனில் நீர் விட்டுக் கொள்ள வேண்டும். கூட்டு மிகவும் நீர்த்து இருந்தால் ஒரு தேக்கரண்டி அரிசிமாவினை சேர்த்துக் கொள்ள வேண்டும். கூட்டு நன்கு வெந்து கெட்டியானவுடன், வாணலியில் நெய் விட்டு, சீரகம், கறிவேப்பிலை போட்டு வதக்கி கூட்டில் சேர்க்க வேண்டும். இறக்குவதற்கு முன்பு ஒரு எலுமிச்சையை பிழிந்து விட்டுக், கிளறி இறக்கவும்

Pin It