தேவையான பொருட்கள்:

அவரைக்காய் - அரை கப்
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 2
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
தனியா தூள் - 1 1/2 தேக்கரண்டி
தேங்காய் பூ - 2 தேக்கரண்டி
மிளகு - கால் தேக்கரண்டி
சோம்பு - கால் தேக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - தேவைக்கு
உப்பு - தேவைக்கு

செய்முறை:

வெங்காயம், தக்காளியை துண்டுகளாக நறுக்கி வைக்க வேண்டும். பூண்டை தட்டி வைத்துக் கொள்ள வேண்டும். அவரைக்காயை கழுவி நறுக்கி வைக்க வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து அதனுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். அதில் மஞ்சள் தூள், சிறிது உப்பு தூவி நறுக்கின அவரைக்காயை சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் தக்காளி சேர்த்து குழைய வதக்க வேண்டும்.

தக்காளி குழைந்ததும் மிளகாய் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து வதக்கிய பின் தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும். காய் வெந்ததும் அரைத்த தேங்காய், மிளகு, சோம்பு விழுது சேர்க்க வேண்டும். நன்கு கொதித்தவுடன் உப்பு, காரம் சரிப்பார்த்து அடுப்பை நிறுத்தி விட வேண்டும். இப்போது சுவையான அவரைக்காய் மசாலா தயார்.

Pin It