அது ஏன்? லத்திகா படத்தை பார்க்‍கும்போது மட்டும் நக்‍கலாக சிரிப்பு வருகிறது. நோக்‍கு வர்மத்தை பார்த்தால் சிரிக்‍காமல், 2 பவுன் தங்கச் சங்கிலியை தொலைத்தவன் போல மூஞ்சியை வைத்துக்‍ கொண்டிருக்‍கிறாய்..... நகைச்சுவை என்று வந்துவிட்டால் எல்லாவற்றிற்கும் சிரிக்‍க வேண்டியதுதானே, உனக்‍கு ஏதோ உளக்‍கோளாறு ஏற்பட்டுள்ளது. நல்ல சைக்‍காலஜிஸ்டை பார்க்‍க வேண்டும் என்று கூறியபோது அவன் கூறுகிறான்........ ஒரு ​டிக்‍கெட்டின் விலை 250 ரூபாய் என்று.

surya_7m_arivuகருணைக்‍ கடலான டோங்லீ....... என் நண்பனை உற்றுப் பார்த்து அவனது 250 ரூபாய் துன்பத்தை மறக்‍கச்செய்து சிரிக்‍கச்செய்வாயாக என்று வேண்டிக்‍கொள்வதைத் தவிர ​வேறு என்ன செய்வது? ஆபரேஷன் ரெட் என்று ஆரம்பித்தபோதே உஷாராகியிருக்‍க வேண்டும். பாதாளச் சாக்‍கடை சுத்தம்செய்யும் தொழிலாளி டோங்லீயின் பார்வை பட்டதும், குங்ஃபூ ஸ்டைலில் ஸ்டெப் போட்டு ஒரு தாக்‍கு தாக்‍குவாறே, அதுவரை நம்பிக்‍கையோடு உட்கார்ந்ததை, கண்கெட்ட பின் சூரியநமஸ்காரம் என்கிற பழமொழிக்‍குத்தான் ஒப்பிட வேண்டும்.

ஜீன் கொள்கை

முருகதாசின் ஜூன் கொள்கைப்படி பார்த்தால் அடிமையின் மகன் அடிமையாக இருக்‍கவும், தோட்டியின் மகன் தோட்டியாக இருக்‍கவும், பணக்‍காரனின் மகன் பணக்‍காரனாகவே இருப்பதற்கும் உரிய திறமைகளை தனது ஜீன்களிலேயே கொண்டிருப்பதாக அல்லவா ஆகிவிடும். போன ஜென்மத்தில் என் கொள்ளுத்தாத்தா ஒரு பேராசிரியராக இருந்தால் போதும். இந்த ஜென்மத்தில் நான் படிக்‍க வேண்டிய அவசியமே இல்லை. 12 நாட்கள் விடுமுறை எடுத்துக்‍ கொண்டு ஸ்ருதிஹாசனிடம் சென்றுவிட வேண்டியதுதான். அவர் என்னை தண்ணிக்‍குள் போட்டு அமுக்‍குவாரோ, இல்லை உடலில் வோல்ட் கணக்‍கில் மின்சாரத்தை செலுத்துவாரோ அதெல்லாம் எனக்‍குத் தெரியாது, போன ஜென்மத்தில் என் தாத்தா படித்ததெல்லாம் நியாபகத்தில் வரவேண்டும். அவ்வளவுதான் விஷயம், எவ்வளவு வேண்டுமானாலும் டியூசன் பீஸ் கொடுக்‍கத் தயார்.

2 ஆயிரம் ஆண்டுக்‍கு முன் எகிப்து பாரோ மன்னன் காலை உணவாக என்ன சாப்பிட்டான் என்று தெரிய​வேண்டுமா? கிளியோபாட்ரா கழுதைப்பாலில் குளித்தாளா, இல்லையா என்று தெரிய வேண்டுமா? எகிப்து தேசத்திலிருந்து ரத்தப் பரிசோதனை மூலமாக இருவரை தேடிப்பிடித்து, சென்னை ஐஐடியில் வைத்து தண்ணீருக்‍குள் அமுக்‍கி 12 நாட்கள் வைத்திருக்‍க வேண்டும் அவ்வளவுதான். பாரோ மன்னன் தினசரி பல் துலக்‍கினானா இல்லையா என்பதைக்‍ கூட ஆதாரப்பூர்வமாக நிரூபித்து விடலாம். ஆனால் காந்தியின் மகன் மட்டும் ஏன் குடித்து விட்டு சாலையில் விழுந்து கிடந்தார் என்று சந்தேகத்துடன் எடக்‍கு மடக்‍கான கேள்விகளையெல்லாம் கேட்கக்‍கூடாது. ஜீன் மூலம் போதிதர்மனின் மருத்துவ மற்றும் மார்ஷியல் ஆர்ட் திறமைகளையெல்லாம் மீட்டெடுப்பது என்பது பள்ளிக்‍ குழந்தையின் புரிதலுடன் கூடிய அபத்தமான கற்பனை.

அதுமட்டும் சாத்தியம் என்றால் வரலாற்று ஆசிரியர்கள் ஊர் ஊராக சென்று பூமியை தோண்டிக்‍கொண்டிருக்‍க வேண்டிய அவசியமே இல்லை. அவர்கள் மனிதர்கள் ஜீனை தூண்டி விட்டு அனைத்துத் தகவல்களையும் ஆதாரத்துடன் பெற்று விடலாம் அல்லவா? ஜெனிடிக்‍கான சில விஷயங்கள் மட்டுமே குரோமசோம்களில் பண்புகளாக கடத்தப்படுகின்றன என்கிற சாதாரண விஷயம் 10ம் வகுப்பு படிக்‍கும் மாணவனுக்‍கு கூட தெளிவாக புரியுமே? போதிதர்மன் இமயமலைப் பகுதிகளில் தேடி எடுத்த வெட்டிவேர்கள் எல்லாம் ஜீனில் நியாபகங்களாக பதிந்து கிடக்‍கிறது என்று கூறுவது அறிவியலை பகடி செய்வதற்கு ஒப்பானதாகும்.

போதிதர்மனின் கொடை மார்ஷியல் ஆர்ட் மட்டுமல்ல. ஜென் தியானமே அவரின் அற்புதம், ஓஷோவின் மாஸ்டர் ஆஃப் ஜென் புத்தகத்தில் அவரது தியானத் தன்மையை பற்றி விரிவாக எடுத்துக்‍ கூற்பபட்டுள்ளது. இன்றைய சீனத் திரைப்படங்கள் மார்ஷியல் ஆர்ட்டையே பிரமாதமாக எடுத்துக்‍ கூறுவதால், "மார்ஷியல் ஆர்ட்டை உருவாக்‍கியவர் போதி தர்மன்" என்று கூறுவதன் மூலம், படத்திற்கு (அ) போதிதர்மனுக்‍கு ரீச் இருக்‍கும் என இயக்‍குனர் நம்பியிருக்‍கலாம். போதிதர்மன் என்ன விஜயகாந்தா? பறந்து பறந்து அடிப்பதன் மூலம் தமிழ் சினிமாவின் முக்‍கிய இடத்தை தக்‍க வைத்துக்‍ கொள்வதற்கு. உண்மையில் போதிதர்மன் ஜென் மதப்பிரிவை உருவாக்‍கியவர் என்கிற ரீதியிலேயே உலகம் முழுவதும் அறியப்படுகிறார். போதிதர்மன் சீனாவுக்‍கு செல்லும் முன் ஒரு பெண்ணை காதலுடன் பார்ப்பது எல்லாம் தமிழ் சினிமாவுக்‍கே உரிய அபத்தங்கள்.

நோக்‍கு வர்மம்:

இந்த இடத்தில் தான் தன்னுடைய மனசாட்சியை எப்படித் தொலைத்தார் என்று தெரியவில்லை. தவறு செய்யும்பொழுது மனசாட்சி முன்னின்று உறுத்தலை கொடுக்‍கும் என்கிற அனுபவம் அனைவருக்‍கும் இருக்‍கும். பரீட்சையில் கூட கதையடிக்‍கும்போது ஒரு அளவுக்‍கு மேல் மனசாட்சி உறுத்த, மதிப்பெண் கிடைக்‍காவிட்டாலும் பரவாயில்லை என்று கதையடிப்பதை நிறுத்தி விடுவோமே.. ஏன்? அதுபோன்று உறுத்தல் எல்லோருக்‍கும் ஏற்பட மாட்டேன் என்கிறது.

படத்தில் சொல்லப்பட்டிருப்பது போல் நோக்‍குவர்மம் உண்மையென்றால்

1. பிரதமரை உற்றுப் பார்த்து தமிழக மீனவர்களுக்‍கு மீன்பிடிக்‍கும் பொழுது இலங்கை ராணுவத்திடமிருந்து பாதுகாப்பளிக்‍க வேண்டும் என்று கேட்டுக்‍ கொள்ளலாம்.

2. தமிழக முதலமைச்சரை உற்றுப் பார்த்து சென்னை கோட்டூர்புர அண்ணா நூலகத்தை குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்றிவிட வேண்டாம் என்று கேட்டுக்‍ கொள்ளலாம்.

3. ஸ்பெக்‍ட்ரம் வழக்‍கை குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்குள் முடித்து விடலாம்.

4. வெளிநாடுகளில் பதுக்‍கி வைக்‍கப்பட்டிருக்‍கும் கருப்பு பணத்தையெல்லாம் பைசா பாக்‍கியில்லாமல் கண்டுபிடித்து விடலாம்

5. ஒவ்வொரு அரசியல் கட்சித் தொண்டனையும் உற்றுப் பார்த்து 10 ஓட்டெல்லாம் போடக்‍கூடாது என்று சத்தியம் வாங்கி விடலாம்.

உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்‍கெல்லாம் நோக்‍கு வர்மத்தை பயிற்றுவிக்‍கலாம். நோக்‍குவர்ம பரீட்சையில் பாஸ் ஆனால் மட்டுமே நீதிபதி பதவிக்கு உயர முடியும் என்று கட்டுப்பாடு விதிக்‍கலாம். எல்லா வழக்‍குகளையும் ஒரே சிட்டிங்கில் முடித்து விடலாம்.

இவ்வாறான நோக்‍குவர்மத்தை பயன்படுத்தி குழந்தைகள் நாடகம் போட்டால் கூட அது நகைச்சுவை நாடகமாகவே கருதப்படும். இதில் ஏற்றுக்‍கொள்ள முடியாத விஷயம் என்னவெனில் 'உலகத் தமிழர்களை தலைநிமிர வைத்த தமிழ்த் திரைப்படம்' என்கிற வார்த்தைகள் தான். உலகத் தமிழர்கள் வேறு எதற்குத்தான் இருக்‍கிறார்கள் வெட்டியாக, அவர்கள் இதுபோன்ற சமயங்களிலாவது (அமைதி காப்பதன் மூலம்) பயன்படட்டும். நானும் இனிமேல் இதுபோல் சொல்லிக்‍ கொள்ளப் போகிறேன். யாரும் வாயைத் திறக்‍கக்‍ கூடாது....... மூச்சு விடக்‍கூடாது....... வாயில் விரலை வைத்துக்‍ கொண்டு அமைதியாக இருக்‍க வேண்டும்..

"இது உலகத் தமிழர்களை தலைநிமிர வைத்த விமர்சனம்"

உலகத் தமிழர்கள் யாரும் ஒரு வார்த்தை பேசக்‍கூடாது. ஜாக்‍கிரதை. நான் மட்டும் என்ன ​இளிச்சவாயனா?, உலகத் தமிழர்களை சொந்தம் கொண்டாட, பயன்படுத்திக்‍ கொள்ள எனக்‍கு மட்டும் உரிமை இல்லையா? 

Comments

14 comments

14
raja
மொக்கை படம். வேலாயுதம் படத்தை விமர்சனம் செய்யவும்
Karuppasamy
Film has been under-rated here. There are few illogical scenes. Overall it is a good tamil film .
surya
வேலாயுதம் படம் எல்லாம் list லயே கிடையாது
ஆத்மார்த்தி
பிரமாதமான விமர்சனம் சூர்யா.வித்யாசமான பார்வை.வாழ்த்துக்கள்
R. Subramanian Iyer
வித்தியாசமான பார்வை. நல்ல ஆழமான படங்கள் தமிழில் மிக அபூர்வம். கிலாடியேட்டர் போன்று எடுக்கவேண்டிய படம் 7-ஆம் அறிவு.

சொதப்பிவிட்டார்கள்.
T S Vaikuntam
இவர் ஒரு பெசிமிச்ட் போலத் தெரிகிறார். படத்தை விமர்சனம் செய்யாமல், DNA வையும் , நோக்கு வர்மத்தையும் விமர்சனம் செய்யக்கிளம்பி விட்டார். அதுவும் அரை குறை வேக்காட்டுத்தனத்தோடு. இவர் ஒரு நவீன அறிவு ஜீவி.வாழ்க.
கலை.தமிழ் வழுதி
thangalathu karuththu eatru kolla pada mudiyatha onru...... pandaiya tamilarin thiramaikal marakka pattu matrum maraikka pattulla nilaiyil thangalin karuththu palil nanju pola ullathu... sithanai sirakattum... puthu ennam pirakattum....
surya
பாண்டிய மன்னர்களின் வரலாறு மறுக்‍கப்படுவதையும், மறக்‍கப்படுவதையும் பற்றி யோசிக்‍கிறீர்கள். போதி தர்மர் பல்லவ மன்னன் 4ம் கந்தவர்மனின் 3வது மகன் என்றே தற்போதுள்ள தகவல்களின் படி அறியப்படுகிறார். படம் முடியும்வரை பாண்டியர்களின் வரலாற்றைப் பற்றியே பார்த்துக்‍ கொண்டிருக்‍கிறோம் என்று உங்களை நம்ப வைத்திருக்‍கிறார்கள் என்றால் நீங்கள் ஏன் படம் அழுத்தமான பதிவை ஏற்படுத்தவில்லை என்று ஏற்றுக்‍ கொள்ளக்‍ கூடாது. ஆகா, ஏதோ தமிழனை பற்றி புகழந்து சொல்லிவிட்டார்கள் சூப்பர் என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம். படத்தில் எடுத்தாழப்பட்டிருக்‍கும் விஷயங்களில் எந்த வித (சென்சிடிவ்நெஸ்) நுண்ணுணர்வும் இல்லை. ஒரு விஷயம் அதற்கென்று சில நேர்மைகளை கொண்டுள்ளது. சிறிது கூட யோசிக்‍காமல் அதை மீறுவது சகிக்‍க முடியாத விஷயம். இதற்குப் பெயர் தான் பெசிமிஸ்ட் என்றால் அப்படியே இருந்துவிட்டு போகட்டும்.
படம் நுண்ணுணர்வோடு, அருமையாக முழு வேக்‍காட்டுத்தனத்தோடு உள்ளது என்று தைரியமாக சொல்லிவிட முடியுமா? பதில் சொல்லிவிட்டால் வேக்‍காட்டுத்தனத்தை பற்றி ஒரு முடிவுக்‍கு வந்து விடலாம்.
வரலாற்றுப்பதிவுகளில் ஒரு நேர்த்தி இருக்‍க வேண்டும் என்று சொல்வது தவறா? அக்‍காலத்து எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களில் கூட அவ்வளவு நேர்த்தி காணப்படுகிறது. மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன், உத்தமபுத்திரன், எஸ்.எஸ்.ஆரி.ன் சிவகங்கைச்சீமையிலே போன்ற படங்களில் கூட, அக்‍காலத்து தொழில்நுட்பங்களுக்‍கு ஏற்ப எவ்வளவு முயற்சியை காட்டியிருப்பார்கள் பாருங்கள். ஒளவையார் படம் பார்த்திருக்‍கிறீர்களா? ஒரே நேரத்தில் அவ்வளவு யானைகளை வைத்து அப்படியொரு காட்சியை இன்று கூட எடுக்‍க யோசிக்‍க மாட்டார்கள். எதற்கு அவ்வளவு முயற்சி எடுக்‍க வேண்டும். அவர்கள் எல்லாம் சினிமா லவ்வர்ஸ். அதனால்தான் அப்படியொரு பதிவுகளுக்‍கு மெனக்‍கெடுகிறார்கள். அவற்றோடு ஒப்பிட்டால் 10 சதவிகிதம் கூட இல்லை 7ம் அறிவு. ட்ராய், க்‍ளாடியேட்டர், அலெக்‍சாண்டர் என வேறு தளத்திற்கு சினிமா பயணித்துக்‍ கொண்டிருக்‍கும் போது, இன்னும் குண்டுச் சட்டிக்‍குள்ளேயே குதிரை ​ஓட்டிக்‍ கொண்டு வெற்றி, வெற்றி என்று கூச்சல் போட்டால் எப்படி?
kannan
என் நீங்கள் போதி தர்மர் பற்றி சொல்ல மறந்தீர்கள்
அதை சுற்றியே கதையே நகர்த்த முயற்சித்தார் இயக்குனர்
vinoth
summa oorukkulla poiya sollitu thiriurathey surya vela. tamilan apatinu oru vartha illaina padatha nai koota mathikathu. vijay mass hero action than pannuvaru. kavalan pathu vai adachu poninkala. ini vijay mass thodarum. surya padatha dustbinla podunka
Sudhakar
7ஆம் அறிவு நம்மை யெல்லாம் திசை திருப்பும் நோக்கத்தோடு எடுக்கப்பட்ட ஒரு படமாகத்தான் தோன்றுகிறது. முதலாலிதுவத்தை ஆதரிக்கும் அமெரிக்கா பற்றி எல்லோருக்கும் தெரியும். இந்த படத்தில் அது ஏனோ மறைக்கப்பட்டும் திரிக்கப்பட்டும் கூறப்பட்டுள்ளது. பாசுமதி அரிசி நம்மிடம் இல்லை, மஞ்சள் நம்மிடம் இல்லை என்று கூறும் இயக்குனர் ஏனோ அது அமெரிக்காவால் நம்மிடமிருந்து பரிக்கப்பட்டது என்று கூறவில்லை. ஆனால் சீனா மீது பழியை போடுகின்றது,குற்றம் சாட்டுகின்றது. உலகத்தை கொள்ளை அடிக்கும் அமெரிக்காவை நல்லவனாகவும், மக்கள் பலத்தை நம்பும் சீனா வை நமக்கு எதிரியாகவும் சித்தரிக்க அவசியம் என்ன? அமெரிக்க படங்களில்தான் ருஷயா, சீனா, வட கொரியா மற்றும் ஈரான் நாடுகள் வில்லன் களாக சித்தரிக்கப்படும் ஆனால் இப்போது தமிழ் சினிமவிலும் அதன் ஆதிக்கத்தை இது போன்ற இடைத்தரகர்கள் மூலம் செயல்படுத்த தொடங்கி உள்ளன.
Ramesh
சினிமாவே கதை தான். இதில் என்ன இன்னொரு கதை. ஒரு கதை சித்தரிக்கப்படும் போது, சிலவைகள் மிகைப்படுத்தப்படுவது இயற்கை. சினிமாவை சினிமாவாக பாருங்க.
Chandru
கட்டுரையாலர் சொன்னது பொல "னகைசுவை என்ரு வந்துவிட்டல் எல்லாவட்ரிர்ர்கும் சிரிக்க வென்டியடு தானெ" - ரொபா சரி.... நல்ல சனகைசுவையான் கட்டுரை.... u have to grow thambi...try complan
sabari
@ ரமேஷ் & சந்துரு

இதில் ஏற்றுக்‍கொள்ள முடியாத விஷயம் என்னவெனில் 'உலகத் தமிழர்களை தலைநிமிர வைத்த தமிழ்த் திரைப்படம்' என்கிற வார்த்தைகள் தான்.

வர்தகத்திற்காக தமிழர் பெருமையை பயன்படுத்தும் அளவில் படம் இயக்கப்படவில்லை.

ட்ராய், க்‍ளாடியேட்டர், அலெக்‍சாண்டர் என வேறு தளத்திற்கு சினிமா பயணித்துக்‍ கொண்டிருக்‍கும் போது, இன்னும் குண்டுச் சட்டிக்‍குள்ளேயே குதிரை ​ஓட்டிக்‍ கொண்டு வெற்றி, வெற்றி என்று கூச்சல் போட்டால் எப்படி?

ஹ்ட்ட்ப்://ந்ந்ந்.டமில்பபெர்.னெட்/?ப்=6841

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.