பேரன்பு மிக்க ரசிகப்பெருமக்களே. நகைச்சுவைப் படமென்றால் லாஜிக் பார்க்கக் கூடாது என்பது கற்பிதங்களில் ஒன்று. அதே சமயத்தில் நகைச்சுவைப் படத்தில் இன்னொரு விதி படத்தின் எந்தக் காட்சியிலும் பார்த்துக்கொண்டிருக்கிறவர்களை அழாச்சி பண்ணவும் கூடாது என்பதும் கற்பிதங்களில் மற்றொன்று. அவன் இவன் என்பது நாம் காசு கொடுத்து தலைவலியை வாங்கிக்கொள்ளும் இடம். ச்சீ படம்.

இந்தப் படத்தில் வரும் ஊரைப் போன்ற எந்த ஊரையும் எந்த மனிதர்களையும், எந்த காட்சியையும் எந்த சம்பவத்தையும் நீங்கள் இயல்புவாழ்க்கையில் பார்க்கவே முடியாது. அப்படியானால் இப்படம் ஈ.டீ மாதிரி ஒரு சயன்ஸ் ஃபிக்ஷன் படமா என்று கேட்கிறவர்களுக்கு, 'தெரியவில்லை'. ஒரு வேளை இப்படத்தை பார்த்துவிட்டு நம் பக்கத்து வீட்டுக்காரனே வெறி கொண்டு நம் மீது பாய்ந்துவிடும் அபாயம் உள்ளது. அப்படி நடக்காமல் பார்த்துக்கொள்ள ஒரு 10 நாளைக்கு ஹெல்மெட் இத்யாதிகளை போட்டுக்கொண்டு வாழ்க்கையை நகர்த்தவும்.

avan_ivan_400ஒரு ஊர். அந்த ஊரில் ஒரு வாழ்ந்து கெட்ட (இப்படத்தை கண்டு திரும்பும் அனைவரும் வாழ்ந்து கெட்டவர்கள் தாம்) ஜமீன்தார். (நந்தா படத்தில் வரும் ராஜ்கிரணின் கோமாளி பதிப்பொன்றை நினைவில் கொள்க.). அவர் ஒரு அநாதை. அதே ஊரில் இருக்கும் பண்பட்ட குடும்பம் (அதாவது ஒருவருக்கு இரண்டு மனைவிகள். இருவருமே அவரை மிதிப்பர். அவர் மாவாட்டுவார். இரண்டு மனைவியருமே சரளமாக கெட்ட வார்த்தைகள் பேசிக்கொள்வர். சரக்கு முழுக்க நீ அடிச்சிராத, அம்மாக்கு கொஞ்சம் வை என்பார் அன்னை. அதே அன்னை பீடி குடிப்பார்.)

அந்த இரண்டு பேருக்கும் தலா ஒரு குறைபிரவசங்கள். விஷால் மற்றும் ஆர்யா. (அவர்களே ஒருவரை ஒருவர் விளித்துக் கொள்வது...போடா வண்டு பீ மண்டையா, டோரிக்கண்ணா) அவர்கள் இரண்டு பேரும் தான் அவன் இவன்.

அந்த ஊரில் ஒரு காவல் நிலையம் இருக்கும். அதில் இருக்கும் அண்ணன் சீ அவர் தாங்க இன்ஸ்பெக்டர். அவர் ஒரு டம்மி பீசு. யாரும் எந்த களவு திருடு பண்ணாமல் இருக்க அவர் காவல் நிலையத்தில் கறிச்சோறு போடுவார். அதைத் தின்ற பின் யாரும் அதன் பிறகு தப்பு செய்ய மாட்டார்களாம். கொடுமைடா சாமி. இயக்குநருக்கு எதெல்லாம் நகைச்சுவை என்பதைப் பற்றிய தெளிவுக்கு இது பதம்.

அடிக்கடி குடிக்கிறார்கள். இதில் வருகின்ற ஜட்ஜ் வழக்கம் போலவே பாலா படங்களிலெல்லாமும் ஒரு ஜட்ஜ் கேணைத்தனமாக சித்தரிக்கப்படுவதைப் போன்றே இதிலும்.100கிலோ பழைய பீரோவின் சாவி தொலைந்து போகிறதாம். அதைத் திறக்க ஒரு பூட்டு ரிப்பேர்காரனைக் கூப்பிடலாமே  என நீங்கள் கேட்கலாம். பகவான் பாலா படமாயிற்றே. அதெல்லாம் நடக்குமா..?

அதை திறக்க வரிசையாக குற்றவாளிகள். முதலில் அவனால் முடியாமல் போன பிறகு இவன் அதாவது ஆர்யா... அவர் வந்து திறந்து கொடுக்க அதற்கு கைம்மாறாக நீதிபதியின் அரசாங்க ஊர்தியில் அதுவும் சரக்கடித்துக்கொண்டே வருவாராம். அவரது வெற்றியை வரவேற்று அவரும் அவரது பெற்ற தாயுமே தலை கிறுகிறுக்க குத்தாட்டம் போடுவார்களாம். ஸ்பெக்ட்ரம் உள்ளிட்ட எல்லா பிரச்சினையும் எனக்கு மறந்து விட்டது.

ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வனச்செல்வத்தை ஒரு 10 அரசு ஊழியர்களை அடித்து நொறுக்கிவிட்டு எடுத்து செல்வார் விஷால். ஆனால் அவர்கள் வசிப்பது அவர்களது சொந்த நாட்டில் அல்லவா..? அதற்காக பிடிபட்ட ஆர்யாவும் விடுவிக்கப் படுகிறார். கேட்டால் நகைச்சுவையாம். கண்களில் ரத்தம் வழிகிறது.

ஒரு பெண் பிள்ளையை நடுரோட்டில் நாலு பேர் பார்க்க குட்டிக்கரணம் போடச்செய்கிறார் ஆர்யா. அவளுக்கு அவர் மீது காதல் வருமே சாமி. பகவான் பாலா அருள்புரிந்து விட்டாரல்லவா..?

இன்னொரு பெண் கான்ஸ்டபிள் ஜனனி ஐயர் அவளிடம் விஷால் கேட்பார். பெண் போலீசுக்கு தரப்படும் பேண்டில் ஜிப் இருக்குமா..? இருந்தால் அதன் உபயோகம் என்ன..? எனக் கேட்பார். அந்த பெண்ணும் அதே விஷாலை காதலிப்பார்.. பின்னே பகவான் பாலா கோபிப்பாரல்லவா..?

என்னடா இவன்...(அது நாந்தாங்க) விமர்சனம் என்கிற பெயரில் பிட் பிட்டாக எதையெல்லாமோ சொல்கிறான் என நினைக்காதீர்கள். படமே அந்த மாதிரி தான் இருக்கிறது. அடிப்படையற்ற கதை. ஆழமற்ற அங்கங்கே தொங்கக் கூடிய திரைக்கதை. நம்பகத் தன்மையற்ற கதாபாத்திரங்கள், திணிக்கப்பட்ட வன்முறை. எதற்கென்றே தெரியாமல் ஒழுங்கற்ற முறையில் கோர்க்கப்பட்ட காட்சிகள்.

மேலும்:

1.மாடு உண்பதை அரசாங்கம் அனுமதிக்கிறதே. ஆட்டிறைச்சி விலையுடன் ஒப்பிடுகையில் ஏழைகளின் உணவு மாட்டிறைச்சி. அதை கண்டுபிடித்து அவ்வளவு பெரிய்ய குற்றம் போல ஆர்.கே .வை பிடித்து செல்ல அத்தனை அதிகாரிகள் வந்து... இதெல்லாம் எதற்காக... உடனே அவர் வெளியே வந்து கொலை செய்வதற்கு வசதியாகவா..? அவர் கேட்கிறார்...குர்பானி என்கிற பெயரில் ஒட்டகத்தை அறுத்து உண்பவர்களை போய் கேட்க வேண்டியது தானே என்று. அது இஸ்லாமியர்களின் மத நம்பிக்கை. அதைப் பேசுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லாமல் வலிய திணிக்கப் பெற்றாற்போல் இருக்கிறது.

2. நவரசங்களையும் அல்லது நவ குழம்புகளையும் தன் முகத்தில் காட்டுகிறார் விஷால். இந்தப் படத்திலேயே சிறந்த நகைச்சுவைக் காட்சி அது தான். நன்றி பாலா.

3. இந்தப் படத்தில் குறிப்பிட வேண்டியவர்கள். ஜீ.எம்.குமார். ஆர்தர் வில்சன். வாசுகி பாஸ்கர். நடன இயக்குநர் சுசித்ரா.

4. எஸ்.ராமகிருஷ்ணன் தன் இலக்கியப் புகழுக்கு தானே தீ வைத்துக் கொண்டார் என்றே சொல்லலாம்.

5.இரண்டாம் காந்தி என்று அழைக்கப்படுகிறவர் யார்..?

இது ஒரு கேள்வி. இக்கேள்வியை ட்யூடோரியல் கல்லூரியில் ஆசிரியர் கேட்டு விட்டு சாய்ஸ் தருகிறார் 1.நெல்சன் மண்டேலா 2.ராஜபக்ஷே. இக்கேள்விக்கு யோசனைக்கு பின் நெல்சன் மண்டேலா என்ற பதில் வந்த உடன் உணர்ச்சி பெருக்கில் ஏசப்பா..ஏசப்பா உமக்கு கோடான கோடி நன்றிகள் ஏசப்பா கோடான கோடி நன்றிகள் என்று உருகுகிறார். இது போன்ற சாய்ஸ்கள் பாலா அல்லது எஸ் ராமகிருஷ்ணன் என்கிற மேதைகளுக்கு தான் தோன்றும்.

6. வலிய வரவழைத்துக் கொண்ட வன்முறைக் காட்சிகளைத் தவிர்த்தால் இப்படத்தை தொலைக்காட்சியில் ஓசியில் ஒளிபரப்புகையில் பார்த்துக் கொள்ளலாம்.

படம் முடிகிறது. a film by bala என்று பிசு பிசு வென கண்களில் இருந்து ரத்தக்கண்ணீர் கசிகிறது. குதித்து குதித்து செல்லும் திரைக்கதை, நம்பகத் தன்மையற்ற கதாபாத்திரங்கள்,வலியத் திணிக்கப்பட்ட காட்சிகளின் கோர்வை, அருவருப்பான வசனங்கள், அதீத வன்முறை, மொத்தத்தில், அவன் இவன்... புறக்கணிக்கப்பட வேண்டிய கோரதாண்டவம்

Comments

16 comments

16
thiru
miga sariyaana vimarsanam.
18/06/2011 iravu 10.15 mani katchikku poi, thookkathai tholaithathuthan micham. Janani iyar sollum, kottavula velaikkuvanthitean ennum vasanam pinthangiya vagupilirunthu idaothukkiteel velaikku selbavarkalai izhivupaduthuvatha vullathu enpathaiyum kavanamedukkavendum.
nelson
baalavai thitti theerka vendum endra mudivodu eludhapatta vaimarsanam madhiri therigirathu nanbaa .. ottu motha padathin nalla vishyagalai orae varyil solla matume ungalal mudindhirukiradhu ...

andha padathil neenga parka marandha niraya sirapaana vishyangal ulladhu.. adhai gavanithirukklam .

.vimarsanam engira peyaril varum padaipukalai konjam keetru valaithalum gavanithirukkalam...

nandri
ம பொன்ராஜ்
படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும்போது வராத ரத்தக் கண்ணீர் இந்த விமர்சனத்தை படித்தவுடன் வருகிறது. "படம் பார்ப்பவன் எல்லாம் கேனையன்" என்று நினைத்து தமிழில் படம் எடுத்த எத்தனையோ பேர் இன்னைக்கு இருந்த சுவடே தெரியாமல் போய்விட்டனர். அந்த விதி இந்த விமர்சனத்தை எழுதிய "ஆத்மார்த்தி"க்கும் பொருந்தும்.
selva
Kevalamana vimasarsanam.
karthikeyan
nan padam parthathum etha than think pana sir thanks
karthikeyan
i all so think same mater
Raghunath
meha sariyana arthamulla vimarsanam.
chandru
nice film...sense of humerous is lot...as per think of your style mokka tha...
arun
vimarsanam seithavarkku periya methavinnu ninaippu. atuthathavangalai kurai koori periya aalai aagi vidalaam entru ninaippu. ethu nalla padam entru example kudukkireerkala. athil evvalo ottaikal entru koorukiren.
தி.முருகையா
படமே ஒரு மாதிரி தான் இருக்கிறது. அடிப்படையற்ற கதை. ஆழமற்ற அங்கங்கே தொங்கக் கூடிய திரைக்கதை. நம்பகத் தன்மையற்ற கதாபாத்திரங்கள், திணிக்கப்பட்ட வன்முறை. எதற்கென்றே தெரியாமல் ஒழுங்கற்ற முறையில் கோர்க்கப்பட்ட காட்சிகள்.குதித்து குதித்து செல்லும் திரைக்கதை, நம்பகத் தன்மையற்ற கதாபாத்திரங்கள்,வலியத் திணிக்கப்பட்ட காட்சிகளின் கோர்வை, அருவருப்பான வசனங்கள், அதீத வன்முறை, மொத்தத்தில், அவன் இவன்... புறக்கணிக்கப்பட வேண்டிய கோரதாண்டவம்
பொன்ராஜ்....உங்களது ஈமெயில் முகவரி-முடிந்தால் செல்போன் எண் இவற்றை குறிப்பிடுங்கள்.தைரியமாக உரையாடுவோம்.பொதுத்தளத்தில் வார்த்தை வாந்தி எடுக்காதீர்கள்.
தங்களுக்கு இருக்கக் கூடிய உலகத்தின் உச்சபட்ச அறிவு பாவம் எனக்கும் கீற்று வாசகர்களுக்கும் இல்லை,ஆதலால் சொல்லுகிறேன்.உங்களது பதிலுக்காக காத்திருக்கிறேன்
aathmaarthi
அருண் என்னும் நான் அறிந்திராதவருக்கு...
நான் மேதாவியா இல்லையா என்பதை காலம் தீர்மானிக்கும்.நான் மேதாவி என்றால் நீங்கள் யாராக இருக்க வேண்டுமென்று விரும்புகிறீர்கள்..? பாலா எனக்கு விரோதி அல்ல.ஆனால் நான் அவர் படங்கள் மீது வைக்கும் விமர்சனங்கள் ஆழமானவையா இல்லையா என்பதை அறிவுசார் சமூகம் தீர்மானிக்கும்.பொதுத் தளத்தில் தைரியமாய் என்னுடைய விமர்சனங்களை வெளியிடுகிறேன்.இது தவிர நான் என்னென்ன எழுதி இருக்கிறேன்...என்னென்ன தளங்களில் இயங்குகிறேன் என்பதை நீங்கள் அறிந்திராவிட்டாலும் கூட சமூகம் உற்றுக் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறது.எனக்கு மேதாவியென்று நினைப்பு இல்லை.பெயரே இருக்கிறது.உங்களுக்கு எப்படி...?இந்த மாதிரி தளங்களுக்கு வந்தோமா நாலு விஷயம் படிச்சோமா...வெளியேறி சென்றோமா என்று இருப்பது நலம்.அதை விடுத்து மொட்டையாய் அருண் என்று ஒரு பெயரை மட்டும் தெரிவித்து விட்டு கழிப்பறையில் ஆபாசமாய்க்கிறுக்கிச் செல்லும் மனநோயாளி போல் பதில் மொழி இடுவது சிறப்பா..?அருண்....உங்கள் தகவல்களை வெளியிடுங்கள்.தைரியமாய் இன்னும் உரையாடுவோம்...ஒருவேளை தைரியமில்லை என்றால்.....இதே போல இணையக்கழிப்பறை வாசகங்களை ஆங்காங்கே வெளியிட்டுக் கோரத்திருப்தி அடைந்து கொள்ளுங்கள்.
subha
Mr Bala is a typical psychriatric patient, thappi thavari thappicha ore padam sethu bcoz of VIKRAM, Hats off to aathamarthi sir for his critic.. let me ask Mr.BALA to read this and let him change is attitude towards cini, he need not think himself high, anga onnum illa sir, please nambunga thakyou subha
Guest
பாலா ஒரு ஃபார்முலாக்குள் சிக்கிக் கொண்டுவிட்டார். போலீஸ், ஜட்ஜ் இவங்களைப் பகடி செய்வது, விளிம்புநிலை மக்களை??? கதைமாந்ந்தர்களாக்குவது, அடித்தட்டு மக்களின் மொழியைக் கையாள்வது????, கொடூரமான கொலை, அதை நியாயப்படுத்த அதைவிட கொடூரமான கொலை... இந்த ஃபார்முலாவிலிருந்து எப்போது விடுபடுவார் பாலா??????/
sabari
பாலா ஒரு ஃபார்முலாக்குள் சிக்கிக் கொண்டுவிட்டார்.
esakki
aathmathi sir, super vimarsanam but padam muluvadhum kurai koora mudiyadhu. enakku therintha 1 pathil 1.ethanaiyo iyakunarkal tamil cinema vil irukirargal but bala pola adithattu makkalin valkaiyai cholvathodu mattumallamal avarkaladhu mozhil chollukirar.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.