இரயில் நிலையத்தில் சர்தார்ஜி அங்கே நின்று கொண்டிருந்த ஒருவரிடம் கேட்டார்.

“இராஜதானி எக்ஸ்பிரஸ் எப்ப கிளம்பும்?”

“12.30 மணிக்கு”

“பஞ்சாப் எக்ஸ்பிரஸ் எப்ப போகும்?”

“1 மணிக்கு”

“டெல்லி எக்ஸ்பிரஸ் எப்ப போகும்?”

“2 மணிக்கு”

இப்படியாக எல்லா வண்டிகளின் நேரத்தையும் கேட்டுக்கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் அந்த பயணி பொறுமையிழந்து, “நீங்க எந்த வண்டியிலே போகப்போறீங்க?” என்று கேட்டார்.

“நான் எங்கேயும் போகலை. தண்டவாளத்தைக் கடக்கணும்!!!”

Pin It