ஒரு நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு ஆசிரியர் பாடம் நடத்தி முடித்து விட்டு கேள்விகள் கேட்டுக் கொண்டே வந்தார். ஒரு மாணவன் எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லாமல் அலட்சியமாக நின்றான். கோபங்கொண்ட ஆசிரியர் அவன் அருகில் சென்று அவனை அடிப்பதற்குப் பிரம்பை ஓங்கி அடிக்க முயற்சித்தார். பையன் சற்று விலகி பிரம்பின் மறு முனையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். உடனே ஆசிரியருக்கு எரிச்சல் அதிகமாகி விட்டது. ஆத்திரங்கொண்ட ஆசிரியர் அம்மாணவனை நோக்கி ‘பிரம்பின் முனையைப் பிடித்துக் கொண்டிருப்பவன் முட்டாள் என்றார். பையன் பிரம்பின் மறுமுனையைப் பிடித்தவாறே கேட்டான். ‘எந்த முனையை பிடித்துக் கொண்டிருப்பவர் சார்’ என்று. வகுப்பில் மாணவர்கள் அனைவரும் சிரித்துவிட்டனர். ஆசிரியர் அமைதியாக நாற்காலியில் உட்கார்ந்து விட்டார்.

Pin It