எழுதப் படிக்கத் தெரியாத தாய்க்கும் பெருங்குடிகாரத் தந்தைக்கும் பிறந்த திக்குவாய் மகன் தான் நிக்கோலி சோஷெஷ்கு என்பவர். இவர் ருமேனியா நாட்டைச் சேர்ந்தவர். நிக்கோலி தமது 18வது வயதில் ருமேனியா கம்யூனிஸ்டு கட்சியில் சேர்ந்தார். இரண்டாம் உலகப் போரின்போது ருமேனியா ஜெர்மனியை ஆதரித்தது. அப்போது அங்கே கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டிருந்தது.

இதன் காரணமாக நிகோலி சிறை செய்யப்பட்டார். இரண்டாவது உலகப்போர் முடிந்தவுடன் ருமேனியாவின் தலைவிதி ஸ்டாலினாலும் சர்ச்சிலாலும் நிர்ணயிக்கப்பட்டது. இது கம்யூனிஸ்டு ஆதிக்கத்தின் கீழ் வந்தது.1945ம் ஆண்டு பொதுத் தேர்தலில் கம்யூனிஸ்டு கட்சி தோல்வியடைந்தது. ஆனால் ஆளும் கட்சியினராக இருந்த கம்யூனிஸ்டுகள் எதிர்கட்சியினரை பாசிஸ்டு துரோகிகள் என்று குற்றம் சாட்டி சிறை செய்தனர்.

மன்னர் மைக்கேலைத் துப்பாக்கி முனையில் பதவியிலிருந்து இறக்கினர். 1945ம் ஆண்டு வரை தேசிய விவசாயிகள் கட்சியைச் சேர்ந்த 2,80,000 உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 72 சதவீதம் பேர் சிறையிலேயே மர்மமான சூழ்நிலையில் மாணடனர். 1968ம் ஆண்டு ரஷ்யாவில் நடந்த கிளர்ச்சியை அடக்கியதன் மூலம் இவர் உலகளவில் தனது புகழை உயர்த்திக் கொண்டார். தன்னை எதிர்த்த எழுத்தாளார்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் பல முக்கியமானவர்களை மனநோயாளி என்று கூறி மனநோய் விடுத்திக்கு அனுப்பினார்.

சிறைக் கைதிகளைக் கொண்ட அவர்களது சவப் பெட்டியைத் தயார் செய்யச் சொல்லி மருந்துகளை அதிகமாகக் கொடுத்து கொன்று அதிலே போட்டு புதைத்தார்,இவரும் இவரது மனைவி எலினாவும் கோடிக் கணக்கில் பணத்தைச் சுருட்டிக் கொண்டனர். பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பணாம் திரட்ட நாட்டிலுள்ள யூதர்களை இஸ்ரேல்லுக்கு தலைக்கு 5000 டாலர்கள் என்று விற்று 40 கோடி டாலர்கள் பெற்றுக் கொண்டார்.

இவரது இராணுவம் 6000 பேர்களுக்கு மேல் சுட்டுக் கொன்றது. கொலை வெறியாட்டம் நடத்தினர். மக்களுடன் இராணுவமும் சேர்ந்துக் கொள்ள அங்கே ரத்த ஆறு ஓடியது. அதே சமயத்தில் ஒன்றுக்கும் உதவாத மிகப் பெரிய மக்கள் மாளிகை ஒன்றை ருமேனியாவில் இவர் கட்டினார். 1989ம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார்.

-ஜெகாதா

Pin It