உணர்வுகளின் அடிப்படையில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உயிரினங்களை ஆறு வகைகளாகக் தொல்காப்பியர் வகைப்படுத்தியுள்ளார். ஓரறிவினை

“ஒன்றறி வதுவே யுற்றறி வதுவே” (தொல். பொருள். மரபியல், 27)

என்றும் அதற்கு உதாரணமாகப்

“புல்லும் மரனு மோரறி வினவே

பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே” (தொல். பொருள். மரபியல், 28)

என்னும் அடிகள் மூலம் புல், மரங்களை ஓரறிவு உயிர்களாக வகைப்படுத்தியுள்ளதை அறியமுடிகிறது.

இங்கே அறிவியலார் புலன்களின் அடிப்படையில் உயிரினங்களை வகைப்படுத்தியுள்ளதை நாம் நோக்க வேண்டும். அறிவியல் கூறும் ஐம்புலம்கள் மெய், வாய், மூக்கு, கண், காது ஆகியனவாகும். இவற்றின் செயல்பாட்டின் அடிப்படையில் தொடுவுணர்வு கொண்ட தாவரங்களும் மரங்களும் ஓரறிவு உள்ள உயிரிகளாக முன்னரே வகைப்படுத்தப்பட்டுள்ளது வியப்புக்குரியதன்றோ!

தாவரங்களுக்கும் இசை கேட்கும் ஆற்றல் உண்டு என்று கூறுவோரும் உள்ளனர், ஒரு சில அறிவியல் ஆய்வுகளும் இதனை வலியுறுத்தியபோதிலும், இக்கருத்தினை அறிவியல் உலகம் இன்னும் ஏற்கவில்லை. இருந்தபோதிலும் அறிவியல் உலகம் தாவரங்களுக்குத் தொடுவுணர்வு உண்டு என்பதனை ஏற்றுக் கொண்டுள்ளது. இதற்குச் சான்றாகத் தொட்டாற் சிணுங்கிச் (Touch me not plant- Mimosa pudica) செடியினையும் பூச்சிகளை உண்ணும் தாவரத்தினையும் (Venus fly trap - Dionaea muscipula) கூறலாம்.

கடுகு குடும்பத்தினைச் சார்ந்த தாவரமான குதிரைப்புல்லில் (Arabidopsis thaliana) அண்மையில் நிகழ்த்தப்பட்ட ஆய்வின் மூலமாக தாவரங்கள் மழை, காற்று முதலானவை ஏற்படுத்தும் அதிர்வுகளையும் உணர்ந்து செயல்படுகின்றன எனக் கண்டறியப்பட்டுள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.

Comments

1 comment

1
Warrant Balaw - Researcher in
அறிவோம்; முதல் அறிவும், எட்டாம் அறிவும்!

நீங்கள் கூறியுள்ள வகைப்படுத்தல்களில், எல்லா துன்பத்திற்கும் அடிப்படை காரணமாக சொல்லப்படும் பற்றுதல் என்கிற முதல் உணர்வு சேர்க்கப்படவில்லை. இதேபோல எல்லா பற்றுதலில் இருந்தும் விடுபட வைக்கின்ற ஞானம் என்கிற இறுதி உணர்வும் அறிவின் வகைகளில் சேர்க்கப்படவில்லை.

புல் பூண்டு உள்ளிட்ட தாவரங்களுக்கு ஓரறிவு என்று சொல்கிறார்கள். இது தவறு. தாவரத்திற்கு இரண்டு அறிவுகள். ஏனெனில், இரண்டு எதிர்விசை உயிரணுக்களின் கலப்பே, ஒரு உயிரினத்தை உருவாக்கும் என்பது இயற்கை நியதி.

விதையை விதைக்கிறோம். வளர்ந்து வெளிவருகிறது. அதலால், அதற்கு ஓரறிவு என்று முடிவு செய்துள்ளார்கள். ஆனால், இது தவறு.

ஏனெனில், தாவரத்திற்கும், பூமிக்கும் இடையில் தொடர்பை ஏற்படுத்துவதே, வேரின் மூலம் வெளிப்படும் பற்றுதல் உணர்வு. ஆக, பற்றுதல் உணர்வே முதல் அறிவு!

பூமிக்கு மேலே வந்த பிறகு ஏற்படுவதே தொடு அறிவு. ஆக இது இரண்டாவது அறிவே!!

இறுதியாக, உலகில் முதலில் தோன்றிய உயிரினம் தாவரமே என்பதால், அதற்கு ஓரறிவு என முடிவு செய்தது, தவறு.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.