இன்றைக்கு விவ‌சாய‌ம் திட்ட‌மிட‌ப்ப‌ட்டு மைய‌ மாநில‌ அர‌சுக‌ளால் அழிக்க‌ப்ப‌டுகிற‌து  

1. தொடர்வண்டி இருவ‌ழிச்சாலைக்காக‌ கைய‌க‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ விவ‌சாய‌ நில‌ங்க‌ள் 

2. நாடெங்கும் நான்குவ‌ழி ஆறுவ‌ழி சாலைக்காக‌ கைய‌க‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட விவசாய நில‌ங்க‌ள்

3.அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக அன்னியன் விரும்பும் நீர் வசதி கொண்ட விவசாய நிலங்களை கையகப்படுத்திக் கொடுத்தல்  

4.தொழில் பூங்காக்கள் அமைப்பதற்காக கையகப்படுத்திய நீர் வசதி கொண்ட நிலங்கள் 

5.மேற்கூறிய‌ கார‌ண‌ங்க‌ளுக்காக‌ அழிக்க‌ப்ப‌ட்ட‌ ஏரிக‌ள் குள‌ங்க‌ள் சிற்றாறுக‌ள்  

6.மேற்கூறிய‌ கார‌ண‌ங்க‌ளுக்கு இடைஞ்ச‌லாக‌ இருந்த‌தால் வெட்ட‌ப்ப‌ட்ட‌ இல‌ட்ச‌க்க‌ண‌க்கான‌ ம‌ர‌ங்க‌ள்   

7. ம‌ழைக்குறைவினால் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ விவ‌சாயிக‌ளுக்கு முறையாக அர‌சு உத‌வாம‌ல் போன‌தால் வாழ்க்கைக்காக‌ வேண்டி வ‌ந்த‌விலைக்கு நில‌ங்க‌ளை விற்றுவிட்டு ந‌க‌ர‌ம் நோக்கி இட‌ம் பெய‌ர்ந்த‌ நிலைக்கு தீர்வு காணாம‌ல் அர‌சுக‌ள் க‌ண்ணை மூடிக்கொண்‌ட‌ நிலை  

8.காய்ந்துபோன‌ நில‌ங்க‌ளை வாங்கி வீட்டு ம‌னைக‌ளாக‌ விற்ப‌னை செய்யும் ரிய‌ல் எஸ்டேட் வியாபார‌த்தை ஊக்க‌ப்ப‌டுத்தி வ‌ங்கி க‌ட‌ன்க‌ள்  

9.உலகமயமாக்கல் என்றபேரில் மேல்நாட்டு மலட்டு விதைகளை விவசாயிகளுக்கு பரிந்துரைத்து இருக்கும் விவசாய நிலங்களை மலடாக்கியது  

10.உள்நாட்டு தொழில் வளர்ச்சி என்ற பெயரில் தோல் பனியன் மற்றும் சில தொழில்களால் நாசமாகும் நதிகளைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்காமல் அந்த தொழில்களையே ஊக்கப்படுத்துதல். 

11.சுற்றுலாத்துறையை ஊக்கப்படுத்துதல் என்ற பேரில் காடுகளை அழித்தல் அதனால் காட்டுமிருகங்கள் தங்கள் உணவு தேவைக்காக விவசாய நிலங்களை நாசப்படுத்தல். 

போன்ற‌ ப‌ல‌ கார‌ண‌ங்க‌ள் விவசாயம் அழிவை நோக்கி போய்க்கொண்டிருக்க ‌த‌ற்போது த‌மிழ‌க‌ அர‌சு சத்தமில்லாமல் சட்டமன்ற விவாதம் இல்லாமல் கொண்டு வந்திருக்கும் க‌ருப்புச் ச‌ட்ட‌ம். த‌ற்போது சில‌ எதிர்ப்புக‌ளால் செய‌ல்ப‌டுத்த‌ப்ப‌டாம‌ல் இருக்கும் இச் ச‌ட்ட‌ம் எப்போது வேண்டுமானாலும் நடைமுறைக்கு வ‌ர‌லாம்.  

அதுதான் ம‌ர‌புசார் இய‌ற்கை வேளாண்முறையை ஒரு விவ‌சாயி ம‌ற்ற‌ விவ‌சாயிக‌ளுக்கோ அல்லது அது ச‌ம்ப‌ந்த‌மாக‌ எல்லா விவ‌சாயிக‌ளும் கூடியோ பேசுவ‌து த‌வறு. அப்படிச் செய்தால் ரூபாய் 5000 முதல் கூடுதல் தொகை தண்டமாக வசூலிக்கப்படும் அல்லது பல ஆண்டுகள் சிறை தண்டனை கூட உண்டு.  

அந்தந்த நாட்டு மக்களின் உணவுத் தேவையை அந்தந்த பகுதி இயற்கை விவசாயத்தால் பூர்த்தி செய்தால்தான் அப்பகுதி மக்கள் நோயின்றியும் நோய் வந்தால் கூட அந்தந்த பகுதியில் விளையும் மூலிகைகளைக் கொண்டு தீர்த்துக் கொள்ள முடியும். இயற்கை விவசாயத்துக்கு அப்பால் வெள்ளையர்களின் தேவைக்காக நமது உணவு முறைகள் மாற்றப்பட்டதால் நாம் இயற்கை மருத்துவத்தை விட்டுவிட்டு விலை கூடிய ஆங்கில மருத்துவத்துக்கு ஆளானோம். 

முற்றிலுமாக நமது மரபுசார் இயற்கை வேளாண்மையிலிருந்து நாம் வெளியேற்றப்படுவதை எதிர்க்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் வாழ்வின் பல துறைகளிலும் நாம் பாதிக்கப்படுவோம்   

- அ.இளஞாயிறு

Pin It