சருமப் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தைத் தடுக்க, குறைந்தது 15 எஸ்.பி.எஃப். (சூரிய பாதுகாப்புப் பொருள்) கொண்ட சன்ஸ்கிரீன் தடவுதல், நண்பகலில் வெயிலைத் தவிர்த்தல் மற்றும் பாதுகாக்கும் உடைகளை அணிதல் வேண்டும். மேலும் தலை மிகவும் முக்கியமான பகுதியாகும். “தலைமுடி சிறிது பாதுகாப்பு அளிக்கிறது, ஆனால் வெயிலில் படக்கூடியவாறு வழுக்கை இருந்தால் உங்களுக்கு சரும புற்றுநோய் ஏற்படலாம்” என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எனவே, புற்றுநோய் ஏற்படக்கூடிய அதிக அபாயம் கொண்டவர்கள் அல்லது தங்களது குடும்ப சரித்திரத்தில் சரும புற்றுநோய் கொண்டவர்கள் அல்லது வெள்ளைத் தோலுடையவர்கள் முறையான பாதுகாப்பு கொள்ள வேண்டியது அத்தியாவசியமாகும். சருமத்தில் 80 சதவீத சேதம் 20 வயதுக்கு முன்பாக ஏற்படுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, ஒவ்வொரு மாதமும் முழு சரும பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். மற்றும் அதிக அபாயம் கொண்டவர்கள் ஒரு தோலியல் நிபுணரால் ஆண்டுக்கு ஒருமுறை பரிசோதித்துக் கொள்ள வேண்டும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.