1817-ம் ஆண்டு லண்டன் மருத்துவர் ஜேம்ஸ் பார்க்கின்ஸன் வழக்கத்திற்கு மாறாக சில நபர்களிடம் காணப்படும் நடவடிக்கைகளை கண்காணித்தார். அந்நபர்களிடம் நடத்திய ஆய்வின் போது நடுக்கம், தசை இறுக்கம், தசைகள் ஒற்றுமையாய் இயங்காமை, நடையில் தள்ளாட்டம் போன்ற நோயறி குறிகளை வகைப் படுத்தினார். மனித மூளையிலுள்ள (நியூரான்) செல்களிலிருந்து உடல் இயக்கத்திற்கு மூலாதார மான டோபமைன் எனும் இரசாயன பொருள் உற்பத்தியாகிறது என்றும் சிலநபர் களுக்கு (நியூரான்) மூளை செல்கள் செயலிழக்கும் போது டோபமைன் உற்பத்தி குறைவதால் உடல் தசை களின் இயக்கத்தின் செயல்பாடுகளில் குறைபாடு நிகழ்கிறது என்றும் தனது ஆய்வின் மூலம் முடிவுக்கு வந்தார். இக்குறைபாட்டினை அவரது பெயரிலேயே ‘பர்கின்சனிசம்’ என்று அழைக்கி றார்கள்.

பார்க்கினிஸம் எனும் நடுக்க நோய் ஆண்களைத்தான் அதிகம் தாக்குகிறது. லட்சத் தில் 20 முதல் 30 நபர்களுக்கு இந்நோய் வருகிறது. மிக அரிதாகவே இளம் பருவத்தினரை தாக்கும். இந்நோய் நாற்பது வயதிலிருந்து 60 வயதிற்குட் பட்டவர்களுக்கு ஒரு வகையாகவும், அறுபது வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வேறு ஒரு வகையாகவும் பார்க்கினிஸத்தின் பாதிப்பு இருக்கும். நடுத்தர வயதினர் சிலருக்கு தீவிரமா கவும், சிலருக்கு குறைவாகவும் இருக்கும். 1918 முதல் 1932 வரையிலான கால கட்டத்தில் உலகளவில் இந்நோய் பரவலாக பாதிப்பை ஏற்படுத்தியது.

முதல்நிலை () ஆரம்ப அறிகுறிகள் :

ஆரம்ப அறிகுறிகளின் போது உடலின் இயக்கத்திற்கு மென்மையாக இருக்க வேண்டிய உடல் தசைகளில் இறுக்கம் ஏற்பட்டு தேவைக் கேற்ப கை, கால்களை இயக்க முடியாமல் போய் விடுகிறது. மேலும், கை, கால், தலை எப்பொழுதும் நடுங்கிக்கொண்டே இருக்கும். சிலருக்கு உடலின் ஒரு புறம், அல்லது ஒரு பகுதியில் மட்டும் கூட நடுக்கம் இருக்கும். கால்களை தூக்கி வைத்து நடக்க சிரமப்பட்டு குழந்தையைப் போல் சின்னச் சின்ன நடை நடப்பார்கள். உட்கார்ந்து எழும் சமயங்களிலும் நடக்கும் போதும் பக்கவாட்டில் திரும்ப மிகுந்த சிரமப்படுவார்கள்.

இரண்டாம்நிலை அறிகுறிகள் :

இந்நோயினால் பாதிக்கப்பட்டோரில் பெரும்பாலோருக்கு அதிகளவு மனச்சோர்வு ஏற்படுகிறது. இரவில் ஆழ்ந்த தூக்கம் இருக்காது; பயங்கர கனவுகளால் தூக்கம் பாதிக்கும்; தூக்கத்தில் தனக்குத்தானே பேசுவார்கள். தசை இறுக்கத்தினால் படுத்திருந்த நிலையிலேயே திரும்பி படுக்க முடியாமல் தவிப்பார்கள். பேசும் போது முணுமுணுப்பது போலவும், உணர்ச்சி யற்றும் பேசுவார்கள். வாயிலிருந்து உமிழ்நீர் ஒழுகும். விழுங்கஇயலாது. தசை இறுக்கம் உடலின் அனைத்து தசைகளிலும் ஏற்படுவதின் ஒரு பகுதியாக உணவுக் குழாயும் இறுக்கமாகி விடுகிறது. சிறிதளவு உணவும், இரைப்பைக்குச் செல்ல சிரமம் ஏற்படும். இதன்விளைவாக உடல் மெலிவு ஏற்படும், செரிமான இயக்கம் குறைந்து மலச்சிக்கல் ஏற்படும். உட்கார்ந்து எழும் சமயம் தலைச்சுற்றல் ஏற்பட்டு கீழே விழுந்து அடிபட்டுக் கொள்ளும் நிலை ஏற்படும். தசை இறுக்கத்தினால் பாதத்தில் உள்ள இரத்த நாளங்கள் பாதிப்படைந்து பாத வீக்கம் ஏற்படும். ஞாபகத் திறன் குறைந்து காலப்போக்கில் நோயாளி தனது பெயரையே மறந்து விடுவார். இந்நோய் மெதுவாக துவங்கி படிப்படியாக முன்னேறி தீவிரத் தன்மையை அடையும். நாட்பட்ட நோய் நிலையில் தாம்பத்திய ஆர்வம் குன்றி மன அழுத்தம், மன உளைச்சல் ஏற்படும். தன் வேலை களைக் கூட தானே செய்ய முடியவில்லையே என்ற ஏக்கமும் காரணமாக பசியின்மை, தூக்க மின்மை ஏற்படும். சிலருக்கு தற்கொலை உணர்வு தலைதூக்கும்.

காரணம் :

சுகாதாரமற்ற சுற்றுப்புற சூழலுக்கு ஆளாவதாலும், இரும்புத்தாது பொருட்கள் தொடர்புடைய இடங்களில் பணிபுரிவதாலும், பூச்சிக் கொல்லிகளை கையாளும் பணிகளில் ஈடுபடுவோர்க்கும் மூளையின் ஒருபகுதியான செரிபெல்லம் (CEREBELLUM) சுருங்குவதாலும், இந்நோய் ஏற்படுகிறது. இரட்டை குழந்தைகளாக பிறப்பவர் களுக்கும் 50 வயதுக்கு மேல் இந்நோய் வரவாய்ப்பு உள்ளது. 15% சதவீதமானவர்களேபாரம்பரியமாக பாதிக்கப்படுகின்றனர். தாய்க்கு இந்நோய் இருந் தால் பிள்ளைகளுக்கு இந்நோய் ஏற்பட வாய்ப்புண்டு.

சிகிச்சை :

இந்நோய்க்கு ஆங்கில மருத்துவ சிகிச்சை யில் பயங்கர கனவுகள், தூக்கத்தில் தனக்குத்தானே பேசிக் கொள்ளுதல், தலைச்சுற்றல், சிறுநீர் தடைபடுதல், தாம்பத்திய ஆர்வம் குறைதல் போன்ற பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன. ஆனால் ஹோமியோபதி அக்குப்பஞ்சர், மலர் மருத்துவ முறைகளில் இந்நோய்க்கு நல்ல தீர்வு காணலாம்.

ஹோமியோபதி சிகிச்சை :

இம்மருத்துவ முறை பொறுத்தவரையில் நோயின் பெயரின் அடிப்படையில் சிகிச்சை வழங்குவதில்லை. தனிமனித உடலில் நோய் மையம் கொண்டு வெளிப்படுத்தும் நோயறி குறிகள் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் ஒவ்வொரு விதமாய் வெளிப்படுத்தும். அப்படி வெளிப் படுத்தும் குறிகளின் தன்மைக்கேற்ப பொருத்த மான மருந்தை தேர்வு செய்து வழங்கும் போது நோயாளியின் நோய் எதிர்பாற்றல் மேம்படுகிறது, நோய் நீங்குகிறது. 

  • தன்னையறியாமல் உடலில் ஏற்படும் நடுக் கம், முக தசைகளில், இழுப்புக்கள் விட்டு, விட்டு வருதல். தலை சுற்றலின்       போது பின்புறமாய் விழுதல். 
  •                - அபிசிந்தியம்.
  • குடிகாரனைப்போல் தள்ளாட்ட நடை, நடுக்கமான தெளிவற்ற பேச்சு, தலை நடுங்கு தல். கண் இமைகள் தாமாகவே      துடித்தல்.    தசை இழுப்பு, நடுக்கம்,      தூக்கத்தில் மட்டும்    நடுக்கம் இருக்காது.

              - அகேரிகஸ்

  • பொருட்களை எடுக்கும் போது கைகளில் நடுக்கம், தசைகள் ஒற்றுமையாய் இயங் காமை. நடக்கும் போது கை, கால் நடுக்கம். நாக்கு நடுங்கும். கடுமையாக நடுக்கம் உள்ள போது தன்னை இறுக பிடித்துக் கொள்ளும் படி அருகில் உள்ளவரை கேட்டுக் கொள் வார்.

-          ஜெல்சிமியம். 

  • உண்ணும்போது கை நடுங்குதல், தடுமாறி தள்ளாடி நடத்தல். நேராக நிற்க இயலாமை,     ஒருபக்கமாகவிழச் செய்தல். வலது புற கை, கால் தானாகவே அசைதல் - விழித்திருக்கும் போது மட்டும் இருக்கும்.

       - காக்குலஸ் 

  • நிற்கும்போதும் நடக்கும்போதும் தள்ளாட் டம், தன்னை பிறர் கவனிக்க வில்லையே என்று நினைக்கும் போது தள்ளாட்டம் அதிகரிக்கும். பொதுவான பலவீனத்துடன் நடுக்கம். மயக்கம் வருவது போல நடுங்கிக் கொண்டே இருத்தல்.

              - அர்ஜென்டம் நைட்ரிகம். 

  • தன்னுணர்வின்றி கை நடுங்குதல்.

              - மெக்பாஸ் 1 ங. வாரம் ஒருமுறை. 

  • தள்ளாட்டமான நடை, எல்லா தசைகளிலும் சோர்வு நடக்கும்போது முழங்கால்களிலி ருந்துபாதம் வரை ஆடுவது போன்ற உணர்ச்சி. கவனமாக அடிஎடுத்து வைப்பார். 
  •        - பைசோஸ்டிக்மா. 
  • தடுமாற்ற நடை, சேவல் போல நடத்தல். நடக்கும்போது பாதத்தை வழக்கத்திற்கு மாறாக உயரே உயர்த்தி குதிங்காலை பலமாக வைத்தல், பஞ்சு மீது நடப்பது போன்ற உணர்வு, நடக்கும்போது வலது பக்கம் திரும்புதல்.
  •        - ஹெலோடெர்மா.
  • குறிப்பாக வயதானவர்களுக்கு ஏற்படும் கோளாறுகள். பாதிப்பு உள்ள பக்கத்தில் மதமதப்பு. 
  •        - அம்ப்ரா கிரிஸியா. 
  • தலையிலும், கைகளிலும் நாட்பட்ட நடுக்க கோளாறு உள்ளவர்கள். உழைப்புக்கு பின் ஒவ்வொரு தடவையும் தலையிலும் கைகளி லும் நடுக்கம் ஏற்பட்டு வெகுநேரம் நீடித்திருக்கும். 
  •        - ஆண்ட்டிடார்ட். 
  • வயதானவர்களுக்கு ஏற்படும் தலை, கை, நடுக்கம். தானாகவே தசைகள் துள்ளுவதும், துடிப்பதும்.

              - அவினா சட்டிவா. 

  • உடல் வலிமை வரவரக் குறைந்து நடுக்கத்து டன் மயக்கம் வருவது போன்ற பலகீனம். கைகளிலும், உள்ளங்கைகளிலும் உள்ள தசைகள் நடுங்கிக் கொண்டே இருக்கும்.

              - காஸ்டிகம். 

  • உடல் முழுவதும் நடுக்கம், ஒருசில தசை களில் மட்டும் நடுக்கம். கை, கால்களில் பலவீனமும் நடுக்கமும், எழுதும்போது கை களில் நடுக்கம், தூக்கத்திலும் கால்களில், உடலில் நடுக்கம், சிலருக்கு ஒரு கையும், தலையிலும் நடுக்கமிருக்கும்.

         - சிங்கம்மெட்.

(மாற்று மருத்துவம் இதழில் வெளியானது)

Pin It