சுகப்பிரசவம், சிசேரியன் எதுவாக இருந்தாலும் பிரசவத்திற்குப் பின் ஸ்கிப்பிங் ஆடுவது நல்லதல்ல. அப்படிச் செய்தால் கர்ப்பப்பை இறங்கிவிட வாய்ப்பிருக்கிறது. சிலருக்கு குழந்தைப் பிறப்புக்குப் பின் தைராய்டு மற்றும் பிட்யூட்டரி ஹார்மோன் குறைந்துபோவதால் எடை கூடலாம். பிரசவத்தில் இழந்த சத்துக்களைப் பெற வேண்டுமென்று அதிகமாக நெய், சர்க்கரை சேர்த்தாலும் எடை கூடியிருக்கலாம். எப்படியிருந்தாலும் டயட்டும் உடற்பயிற்சியுமே எடையைக் குறைக்க போதும்.
Pin It