நாள்தோறும் பச்சை வாழைத்தண்டை நறுக்கி, அதைச் சாறு பிழிந்து, சாற்றுடன் எலுமிச்சைச் சாறு கலந்து பருகினால் உடல் எடை குறையும், பருமன் குறையும், இதயத்தில், இரத்தக் குழாய் அடைப்பு நீங்கி, மாரடைப்பு வராது காக்கும்.
கொழுப்புப் பொருட்கள், இறைச்சி, செயற்கை உணவு சாப்பிடக் கூடாது.
கீரை, பழம், காய்கறி, மீன் உண்ணவும்.
நடைப்பயிற்சி, உடற்பயிற்சி தினம் 1 மணி நேரம் செய்யவும்.
நாள்தோறும் காலையில் சாப்பாட்டிற்கு முன் ஒரு துண்டு இஞ்சியைத் தோல்நீக்கி, மென்று விழுங்கி தண்ணீர் குடிக்கவும்.
மதியம் சாப்பாட்டிற்குப் பின் இரண்டு பூண்டு பல் பச்சையாக வாயில் தண்ணீர் வைத்து, தண்ணீருடன் சேர்த்து மென்ற விழுங்கவும். தண்ணீருடன் மென்றால் பூண்டு காரம் தெரியாது. வாய் புண்ணாகாது.
கொள் சுண்டல் செய்து தினம் மாலையில் சாப்பிடவும்.
- மஞ்சை வசந்தன்