உடல் வலி, மூட்டு வலி, காய்ச்சல், ஆஸ்துமா, வீக்கம் போன்ற உடல் உபாதை உள்ளவர்கள் உணவில் புளிப்பைச் சேர்த்துக் கொள்ள கூடாது. ஏனெனில் புளிப்பு உடலில் அமிலத்தை அதிகரித்து இன்னும் இந்த நோய்களின் தன்மையை அதிகரிக்கும். 10-15 நாட்களுக்கு புளிப்பான உணவை தவிர்க்க வேண்டும்.

தக்காளி, எலுமிச்சை, தயிர், மோர், புளி, ஆரஞ்சு, சாத்துகுடி, மாம்பழம், திராட்சை ஆகியவை புளிப்புத் தன்மை உள்ளவை.

நோயாளிகள் குளிர்பானங்களையும், ஐஸ்கிரீம் வகைகளையும் தவிர்க்க வேண்டும்.

காயிலே புளிப்புதன்மையும், பழுத்த பின் இனிக்கும் பழவகைகளையும் தவிர்க்க வேண்டும். பப்பாளி, சீதாபழம், கொய்யா, வாழைப்பழம், சப்போட்டா, அத்திபழம், கரும்பு, எலுமிச்சை சேர்க்காத கரும்புச்சாறு, இளநீர் மற்றும் தர்பூசணி சேர்த்துக் கொள்ளலாம்...

மைதா சேர்க்கப்பட்ட எந்த உணவையும் உணவில் சேர்த்துக் கொள்ள கூடாது. மைதா உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிப்பதால் பிரட், பிஸ்கட், நூடுல்ஸ், சமோசா போன்ற மைதாவால் ஆன பொருட்களை எப்போதுமே அறவே தவிர்க்க வேண்டும்.

மது, புகை பிடித்தல் மற்றும் புகையிலை போடுவதை தவிர்க்க வேண்டும்.

Pin It