உலகில் 60 சதம் சர்க்கரை நோயர்களுக்கு டயபடிக் நியூரோபத்தி எனும் நரம்பு செல் கோளாறுகள் ஏற்படுகின்றன. நரம்பு செல்கள் உடலில் சேதமடைவதால் கை கால்களில் ஜிலுஜிலு என்று குறுகுறுப்பு தோன்றும், பின்னர் அந்த இடம் மரத்துப்போகும். இதை கவனிக்காமல் விட்டுவிட்டால் விரல்களை வெட்டி எடுக்கவேண்டிய நிலையும் ஏற்படும்.

வெயன் ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் 427 சர்க்கரை நோயர்களிடம் சோதனை நடத்தியபோது நரம்பு சேதம் உற்றவர்களிடம் இரத்தத்தில் அதிகமாக ட்ரைகிளசரைடு என்ற கொழுப்புப் பொருள் அதிகமாக இருப்பது தெரியவந்தது. இனி சர்க்கரை நோயர்களிடம் சர்க்கரை அளவை சோதிப்பதுடன் ட்ரைகிளசரைடு அளவையும் கூடவே சோதித்துக் கொண்டால் பெரும் சேதாரங்களிலிருந்து ஆரம்பத்திலேயே தப்பித்துக் கொள்ளலாம் என்று தெரிகிறது.

- முனைவர் க.மணி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It