அணு உலை என்பது குழந்தைகள் மணலில் சிறுவீடு கட்டும் விளையாட்டு அன்று. மிக அழகாக சில நொடியில் இக்காணொளி உணர்த்துகிறது. ஆம்! அணு உலை என்பது உயிரைக்கொல்லும் உலை. மனித உயிர் மட்டும் அன்று. உயிரினங்கள் யாவும் பாழ்படும் நிலைக்கு மட்டுமே அணு உலை ஏற்புடையதாகும். அரசுக்குத் தெரியும். ஆனாலும் அரசு இந்தியாவை அயல்நாட்டில் அடகு வைத்துவிட்டது. இதனால் வந்த விளைவே அணு உலை ஏற்பாடு. இதை ஒழிப்போம்! அணு உலையை முற்றிலும் ஒழிக்கப்பாடுபடுவோம்! சாதி, சமய வேறுபாடுகள் தவிர்த்து நாம் அணு உலையை ஒழிப்பதற்குக் கூடுவோம்! அதுகடற்கரையோர மக்களின் வாழ்வு தொடர்பானது மட்டும் அன்று. நமக்காகப் போராடும் மக்களோடிணைந்து நாமும் அணு உலையை அழிக்கவும் ஒழிக்கவும் போராடுவோம். நம் அரசு நமக்காகத்தானே அன்றி அயல்நாட்டின் ஒப்பந்தத்திற்காக அன்று.
தொடர்புடைய படைப்புகள்
பிப்ரவரி 26 அணு உலை எதிர்ப்பு மாநாடு அழைப்பு - காணொளி
- விவரங்கள்
- அணு உலை எதிர்ப்பு மக்கள் இயக்கம்
- பிரிவு: காணொளி
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.