எங்களது அம்மாவின் நினைவாக அமைக்கப்பட்ட விசாலாட்சி நினைவு அறக்கட்டளை சார்பில் நாவல் எழுதும் போட்டி ஒன்று நடத்துகிறோம். இந்த நாவல் போட்டியின் மையமான கருத்தாக ஒற்றைப் பெற்றோர் என்பது இருக்கும். ஒற்றைப் பெற்றோர் என்பது ஒற்றைத் தாய், விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், விவாகரத்து பெற்றவர்கள் ஆகியோரையும் அவர்களின் பிள்ளைகள் வாழ்வியலை, சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டதாக இந்த நாவல் இருக்க வேண்டும். சில சமயங்களில் ஒற்றைத் தந்தையும் இதில் அடங்கும்.

பழமைவாத ஆண் பெண் சமமில்லை என்ற கண்ணோட்டம், மனுஸ்மிருதி, சனாதன வரலாற்று கண்ணோட்டம், ஆணாதிக்க குடும்ப சிந்தனை கொண்ட சமூகத்தில் இன்றும் ஒற்றைப் பெற்றோர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், இன்னும் இதே போன்று வேறு பிரச்சனைகள் அடிப்படையில் இந்த நாவல்கள் இருக்கலாம்.

வாய்ப்புள்ள அனைவரும் இந்த போட்டியில் கலந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

நாவல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு

முதல் பரிசு: ₹25,000 இரண்டாம் பரிசு: ₹20,000 மூன்றாம் பரிசு: ₹15,000 வழங்கப்படும்.

தகுதியான மற்ற நாவல்களுக்கு ஊக்கப் பரிசு வழங்கப்படும்.

கதை சொல்லும் வாழ்வியல், கதை சொல்லும் திறன், மொழிநடை ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்த நாவல்கள் தேர்வு செய்யப்படும். ஐந்து பேர் கொண்ட நடுவர் குழு இதை முடிவு செய்யும்!

விதிமுறைகள்

நாவல் போட்டியில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். ஒரு நபர் ஒரு நாவல் மட்டுமே அனுப்ப அனுமதி. நாவலின் அளவு குறைந்தபட்சம் 25,000 வார்த்தைகள். அதிகபட்சம் நாவலின் மைய வாழ்வியலைப் பொறுத்து நாவலாசிரியர் நீடித்துக் கொள்ளலாம்.

ஏற்கனவே அச்சிலோ, மின் இதழிலோ, அல்லது ஆடியோ புத்தகமாக எந்தவித வடிவத்திலும் வெளியிடாத படைப்பை மட்டுமே அனுப்புகிறேன் என்று உறுதியளிக்க வேண்டும்.

நாவலை மின்னஞ்சலில் யூனிகோட் வடிவத்தில் மட்டுமே word document-ல் அனுப்ப வேண்டும். கையெழுத்துப் பிரதி, பிடிஎஃப் (PDF) ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

படைப்புகளை அனுப்ப வேண்டிய கடைசி நாள்: டிசம்பர் 3, 2026

தொடர்புக்கு: கி.நடராசன் விசாலாட்சி நினைவு அறக்கட்டளை செல்பேசி: 9849855078

நன்றி

- விசாலாட்சி நினைவு அறக்கட்டளை

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.