may17 rajiv case agitation

பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய ஏழ்வரையும் விடுதலை செய்.

26 ஆண்டுகளாக நிரபராதிகள் சிறையில்!
ஜெயின் கமிஷனால் குற்றம் சாட்டப்பட்ட சுப்ரமணிய சுவாமிகள் வெளியில்..

மகாத்மா காந்தியைக் கொன்ற வழக்கில் Accused No.2 ஆக இருந்த கோபால் கோட்சேவை விடுவிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் சொன்ன போதும், மகாராஷ்டிரா காங்கிரஸ் அரசாங்கம் 15 ஆண்டுகளில் மாநில அதிகாரமான பிரிவு 161-ஐ பயன்படுத்தி விடுதலை செய்தது.

பார்ப்பானுக்கு ஒரு நீதி! நிரபராதி தமிழருக்கு ஒரு நீதியா?

தமிழக அரசே! அதிகாரம் இல்லையென்று நாடகமாடாதே! ஏழ்வரையும் விடுதலை செய்வதற்கான முயற்சிகளை உடனடியாக துவங்கு.

மத்திய பாஜக அரசே! தமிழர் விரோத போக்கினை கைவிடு! ஏழ்வர் விடுதலையை தடுக்காதே!

தமிழகமே எழு! நமது போராட்டமே மத்திய, மாநில அரசுகளின் நாடகத்தினை முடித்து வைக்கும்.

26 ஆண்டுகளை சிறைக் கொட்டடியில் கழித்த பின்னர், என்னை விடுதலை செய்யாவிட்டால், கருணைக் கொலை செய்து விடுங்கள் என்கிறார் நிரபராதி ராபர்ட் பயஸ். இதுவா காந்தி தேசம்?

தோழர் செங்கொடி நம் கையில் கொடுத்துச் சென்ற லட்சியத்தினை நிறைவேற்றுவது நம் கடமையல்லவா! நீதியின் பால் விருப்பு கொண்டோர் அனைவரும் வாருங்கள்.

தமிழகம் முழுதும் போராட்டங்கள் துவங்கட்டும். அனைவரும் வாருங்கள்.

ஜுலை 2, ஞாயிறு மாலை 4.30 மணிக்கு வள்ளுவர் கோட்டத்தில் திரள்வோம்.

- மே பதினேழு இயக்கம்

Pin It