இது நினைவு முற்றமல்ல, நெடுமாறன் ஈழத்தமிழர்களை வைத்து செய்த அரசியல், அதுவும் அறுவெறுப்பான அரசியல் வியாபாரத்தால் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களுக்கு அவர் செய்யும் பிராயச்சித்தம். இந்து மதத்தில் செய்த பாவத்துக்கு பரிகாரம், செய்வது நடைமுறை. தீவிர இந்து மத நம்பிக்கையாளரான நெடுமாறன், முத்துக்குமாரின் சடலம் சனிக்கிழமை போனால் அது தனிப்பிணமாக பீகாது என்று வாதிட்டவர். அவர் தனது ஈழத்தமிழர் துரோகத்திற்கு எழுப்பும் பிராயச்சித்தமே இது.
K
k.natarajan
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர்கள் ராதாகிருஷ்ணன், இந்து மக்கள் கட்சி அர்சுன் சம்பத் முள்ளிவாய்க்கால் முற்ற துவக்கவிழாவில் பங்கேற்பது எதறக்காக?.
1.பிஜேபி கட்சி தனி ஈழத்தை ஆதரிக்கிறதா?
2.ஈழத்திற்க்கான அய்.நா பொது வாக்கெடுப்பை ஈழ்த்தில் நடத்த பிஜேபி கட்சி ஆதரிக்கிறதா?
3. குறைந்த பட்சம் முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையை விசாரிக்க சர்வதேச பொதுவிசாரணை குழு அமைப்பதை பிஜேபி கட்சி ஆதரிக்கிறதா?
கொல்லன் உலை களத்தில் ஈக்களுக்கு என்ன வேலை?
எப்பொழுது இந்த இந்துத்துவா-அகண்ட பாரத காவி ஆசாமிகள் உலகதமிழக தலைவர்கள், ஈழ ஆதரவு கட்சி தலைவர்கள், ஈழ ஆதரவு இயக்க தலைவர்கள் மாறினார்கள்… ?வாஜ்பாயின் தலைமையிலான பிஜேபி கட்சி ஆட்சியின் பொழுது விடுதலைபுலிகள் யாழ்பாணத்தினை கைப்பற்றுகின்ற சூழ்நிலை வந்த பொழுது அதை முறியடித்தது யார்? அப்பொழுது புலிகளை முறியடிக்க இலங்கை அரசிற்கு உதவி செய்தது யார்? விடுதலைபுலிகளை அழித்தவர்களை கொண்டே விடுதலைபுலிகளுக்கு நினைவு சின்னம் தொடக்குவது உலக வரலாற்றில் இதுதான் முதல்தடவையாக இருக்கும்.
K
k.natarajan
தோழர்கள் தியாகு, திருமாவளவன் அவர்களை விட இந்துத்துவாதிகள் ஈழ அரசியலுக்கு நெருக்கமானவர்களா?
திருமாவளவன் அவர்களிடம் சில முரண்பாடுகள் இருக்கலாம்.. ஆனால் ஒடுக்க பட்ட மக்களிடம் ஈழ அரசியலை கொண்டு சேர்ந்த பெருமை வேறு யாருக்கு தமிழ் நாட்டில் உள்ளது. ....நெடுமாறன், வை.கோ இன்னும் பல தமிழகத்தின் ஈழ ஆதரவு தலைவர்கள் அடக்குமுறை சட்டங்களில் சிறை செல்ல இந்த இந்துத்துவாதிகளின் வெறுப்பு உமிழும் பேச்சுகள்தான் காரணம் ! விடுதலைபுலிகள் ஆதரவாக சிறு அசைவுகளை கூட தடை செய்ய வேண்டும் என்று பத்திரிக்கைகள் மூலம் புலி எதிர்ப்பு பூச்சாண்டி காட்டியும், தமிழக போலிஸ்துறைக்கு நெருக்கடி கொடுத்தும் ஈழ விடுதலை ஆதரவாளர்களை கடந்த 30 ஆண்டுகளாக அடக்கு முறைக்கும், கைதுகளுக்கும் முதன்மை காரணமான இராமகோபாலன், அர்சுன்சம்பத், பொன்னர், சுப்பிரமணியசாமி போன்ற இந்துத்துவா-அகண்ட பாரத காவி ஆசாமிகள், இந்துத்துவாதிகள், பிஜேபி கட்சியினர் எப்பொழுது உலகதமிழக தலைவர்கள், ஈழ ஆதரவு கட்சி தலைவர்கள், ஈழ ஆதரவு இயக்க தலைவர்கள் மாறினார்கள்…
அய்யா நெடுமாறன் மட்டுமல்ல இந்த விழாவில் கலந்து கொள்ளும் ஒவ்வொருவரும் இதற்க்கான பதிலை தமிழக மக்களுக்கு, ஈழத்தமிழர்களுக்கு விளக்க வேண்டும்..இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் பிணங்களின் மீது அரசியல் சூழ்ச்சிகளை அரங்கேற்றம் செய்யாதீர்கள்! வரலாறு உங்களை மன்னிக்காது!!
க
குமரன்
பல்வேறு முரண்பட்ட கொள்கைகளையும், கோட்பாடுகளையும் கொண்டவர்களின் கூட்டம், தன்னை முன்னிறுத்திக் கொள்ள விரும்பும், தனது இருப்பைக் கட்டிக் கொள்ள விரும்பும், மலிவான புகழை நாடும் கூட்டம், - இவர்களை ஒன்றிணைத்துஅரசியல் இலாபம் தேட முயலும் அரசியல் தரகர்களின்,சந்தர்ப்பவாதிகளின் நிகழ்ச்சி. இவர்கள் யார் என்பதைத் தமிழக் மக்கள் அடையாளம் கண்டுகொள்ள ஒரு நல்வாய்ப்பு இது.
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.