ஜாதிவெறித் தாக்குதலில் ஈடுபட்டவர்களையும், கலவரம் நடக்கக் காரணமான - ஜாதி மறுப்புத் திருமணங்களை எதிர்க்கும் - பிராமணர் சங்க நாராயணன், வன்னியர் சங்க காடுவெட்டிகுரு, கொங்கு வேளாளர்பேரவை பொங்கலூர் மணிகண்டன், காரைக்குடி செட்டியார்களின் பழ.கருப்பையா ஆகியோரையும், தீண்டாமை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யக் கோரியும்,

உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்காத காவல்துறை, வருவாய்துறை அதிகாரிகள் மீது தீண்டாமை வன்கொடுமைச் சட்டம் பிரிவு 4 ன் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரியும்,

ஜாதிமறுப்புத் திருமணத் தம்பதியினருக்கு பாதுகாப்பு வழங்க காவல்துறையில் தனிப்பிரிவைத் தொடங்கக் கோரியும்,

ஜாதிமறுப்புத்திருமணத் தம்பதியினருக்கும் அவரது வாரிசுகளுக்கும் ஜாதிஅற்றோர் (No Caste) பிரிவை உருவாக்கி இடஒதுக்கீடு வழங்கக் கோரியும்,

காதலர் தினவிழாக்களை எதிர்க்கும் பார்ப்பன இராம.கோபாலனின் இந்து முன்னணி, விசுவ இந்து பரிசத், பா.ம.க போன்ற அமைப்புகளைத் தடைசெய்யக் கோரியும், திராவிடர் விடுதலைக் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்

15.11.12 வியாழன் மாலை 4.00,  நகராட்சி அருகில், திண்டுக்கல்

தலைமை:

தோழர் நா. நல்லதம்பி, மாவட்டச்செயலாளர் தி.வி.க

கண்டன உரை:

தோழர் சூ.ச.மனோகரன், நிறுவனத் தலைவர், தலித் போராளிகள் முன்னணி

தோழர் வில்லவன்கோதை, மாவட்டச் செயலாளர், விடுதலைச் சிறுத்தைகள்

தோழர் க.பெரியார் மணி, மாநிலக்குழு, தமிழகப்புலிகள்

தோழர் சத்திரப்பட்டி க. முருகன், மாவட்டஅமைப்புச்செயலாளர்,ஆதித் தமிழர் பேரவை

தோழர் பாண்டியன், புரட்சிகர இளைஞர் முன்னணி

தோழர் தி.தாமரைக்கண்ணன், மாநில அமைப்புச் செயலாளர், தி.வி.க

தோழர் முருகேசன், மதுரை மாவட்டத்தலைவர்

நன்றியுரை: தோழர் க.பெரியார்நம்பி, தி.வி.க மாவட்டத் தலைவர், தி.வி.க

தோழமையுடன்

திராவிடர் விடுதலைக் கழகம் - திண்டுக்கல் மாவட்டம்

தொடர்புக்கு: 9786889325, 9486648007, 9500434605

Comments

2 comments

2
sukumaran
அனைவருக்கும் என் வனக்கம் : எனக்கு ஒன்ரு மட்டும் புரியவே இல்ல இதர்க்கு முன் தெர்தலின் பொது திருமா & ராமதாஷ் இருவரும் ஒன்ட்ரகா இருந்ததை உடகஙகலின் வழி பார்த்தொம் இப்பொ என்ன ஆனார்கல் ....அன்னன் கருத்து என்ன?....
ஷாலி
ஜாதிக் கட்சி தலைவர்களை கைது செய்ய கோரிக்கை வைப்பது நியாயமான ஒன்றே.அமைதியாக வாழும் தமிழகத்தை அமளிக்
காடாக்கிய தருமபுரி,திருக்காட்டுப்பள்ளி சம்பவங்கள் இனி தொடராமல் இருக்க, சாதி-வியாதிக் கிருமிகளை வெளியில் விட்டு வைப்பததை விட உள்ளே வைப்பதுதான் மக்களுக்குப் பாதுகாப்பு. ஆனால் இறுதியாக ஒரு கோரிக்கை வைத்துள்ளார்கள்.அதுதான் இடிக்கிறது. ‘காதலர் தினங்களை” எதிர்க்கும் இந்து முன்னணி,வீப,பாமக அமைப்புகளை தடை செய்.” இந்த அமைப்புக்களை தடை செய்யக்கோறும் நியாயமான காரணங்கள் ஏராளம் உள்ளது.அதையெல்லாம் கண்டு கொள்ளாமல், “காதலர் தினம்” எதிர்ப்பை கையில் எடுத்தது நியாயம் அல்ல.உண்மையில் இந்து முன்னணி தமிழ் மக்களுக்கு செய்யும் ஒரே நல்ல காரியம் இது ஒன்றுதான்.வாலண்டைன் எனும் ஒற்றை ரோஜா கடைசரக்கை, காதல் எனும் பெயரில் காதில் பூ வைத்து பெண்ணை நுகர்ந்து சீரழிக்கும் சிறுமையை ஆதரிப்பதா?கடற்கரை,பூங்கா போன்ற பொது இடங்களில் காதல் பாடம் நடத்தும் காம விளையாட்டுகாரர்களிடம் மஞ்சள் கயிறை கொடுத்து “கட்டுடா தாலியை” என்று இந்து முன்னணி கூறியதும் காதலன் தெறித்து ஓடுவது ஏன்? தகப்பன் பெயர் தெரியாத தருதலைகளை உருவாக்கிய, மேல்நாட்டு கட்டற்ற பாலியல் சுதந்திரம் காதலர் தினமாக இங்கு கருத்தரித்துள்ளது. பெண்ணடிமைத்தனம் எதிர்த்தே பெரியார் பாடுபட்டார்.பெண் விடுதலை என்ற பெயரில் “நாளொரு டேட்டிங்,பொழுதொரு மீட்டிங்” எனும் “போக” கலாச்சாரத்தை பெரியார் ஆதரித்ததில்லை.தமிழ் பண்பாடு,நாகரீகம்,கலாச்சாரத்தை சிதைத்து சீரழித்த பின்பு,எந்தத் திராவிடர் விடுதலைக்கு கழகம் பாடுபடப்போகிறது?

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.