இன்று (9 November 2011) காலை 9 மணி அளவில் சேவ் தமிழ்ஸ் இயக்கத்தை (Save Tamils Movement) சேர்ந்த 20 தகவல்தொழில்நுட்ப துறை பணியாளர்கள், சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள பேபால் (PayPal) அலுவலகத்தின் முன் நின்று ஆர்ப்பாட்டம் செய்தனர். தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் அந்த நிறுவனத்துடைய ஆண்டு விழாவான 'டும் டும் டும்' நிகழ்ச்சியில் பங்குபெறும் வெவ்வேறு அணிகளுக்கு உயர்சாதியை குறிக்கும் பெயர்களை வைத்ததற்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

PayPal_620

"சாதிப் பெருமையை கொண்டாடாதீர்கள்", "நிறவெறியை ஆதரிப்பீர்களா?", ''மௌனத்தை உடைத்தெறியுங்கள்'', "நாகரீகமாக மாறுங்கள்" போன்ற கோஷங்களை எழுப்பினர்.

'கார்ப்பரேட் (Corporate) கலாசாரம் என்பது சமூக பொறுப்பில்லாமல் சுரணையற்று இருப்பதா? உடைகள் அணியும் விதமும், நவீன தொழில்நுட்பமும் மட்டுமே தான் நாகரீகத்தை குறிக்கிறதா? சமூக நீதி பற்றியது இல்லையா அது?' என்று பணியாளர்களை கேள்வி கேட்கும் வகையில் பதாகைகளை பிடிக்கவும், துண்டறிக்கைகளை விநியோகிக்கவும் செய்தனர்.

சிறிது நேரத்திற்கு, அவர்களிடம் பேசுவதற்காக மூத்த பாதுகாப்பு அதிகாரி வெளியே வந்தார். கொடுக்கப்பட்டுள்ள அணியின் பெயர்களை மாற்ற வேண்டும், சாதிப் பெருமையை கொண்டாடியதற்காக பகிரங்கமாக (பேபால் ஊழியர்களிடமும், ஊடகங்களிடமும்) மன்னிப்பு கோர வேண்டும் என்று அவர்கள் பேபால் நிறுவனத்தின் தலைமையிடம் இரண்டு கோரிக்கைகளை வைத்தனர். அந்த அதிகாரியிடம் இது பே பால் நிறுவனத்திற்கும் சேவ் தமிழ்ஸ் இயக்க்கத்திர்க்குமிடையே உள்ள தனிப்பட்ட பிரச்சனை அல்ல என்றும், இந்த மன்னிப்பை சமூகத்திடம் அவர்கள் கேட்க வேண்டும் எனவும் தெளிவுபடுத்தினர். முப்பது நிமிடங்கள் கழித்து அவர்களுடைய கார்பரேட் செய்தித்தொடர்பு மேலாளர், தங்களுடைய பொது மேலாளர் கையெழுத்திட்ட ஒரு அறிக்கையுடன் வெளியே வந்தார். அதற்குள் உள்ளூர் போலீஸ் அந்த இடத்திற்கு வந்திருந்தனர்.

 அந்த அறிக்கை:

"இந்தியாவின் பன்முகத் தன்மையை குறிப்பதற்காகவே பே பால் இந்தியாவைச் சேர்ந்த ஊழியர்களுக்கான ஆண்டு விழாவில் ‘மாபெரும் இந்திய திருமணம்' என்னும் தலைப்பை தேர்ந்தெடுத்திருந்தோம். தனித் தனி அணிகளுக்கு நாங்கள் கொடுத்த பெயர்கள், எங்கள் ஊழியர்களின் பன்முகத்தன்மையை குறிக்கும் என்றும், திருமணம் போன்ற ஒரு முக்கிய நிகழ்வு நம் அனைவரையும் எவ்வாறு ஒன்று சேர்க்கிறது என்பதை குறிக்கும் என்றும் நாங்கள் எண்ணினோம். ஆனால், இந்த முக்கியமான உட்புற ஆண்டு விழாவில் நாங்கள் வெளிப்படுத்த நினைத்த எங்கள் ஊழியர்களின் பன்முகத்தன்மையை அந்த அணிகளுக்கு நாங்கள் இட்ட பெயர்கள் வெளிப்படுத்தவில்லை. அவை இந்தியாவில் உள்ள பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த உயர்சாதியினரை குறிக்கும் வகையில் அமைந்து விட்டது. இது எந்த உள்நோக்கத்துடனும் செய்யப்பட்டதல்ல. உயர்சாதியினரை குறிக்கும் வகையில் அமைந்துள்ளவற்றை உடனடியாக நீக்குகிறோம். இதனால் யாரேனும் துன்பப்பட்டிருந்தாலோ, அல்லது யாரையேனும் நாங்கள் புண்படுத்தி இருந்தாலோ மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்"

PayPal_630

கடிதத்தை கண்ட சேவ் தமிழ்ஸ் இயக்கத்தின் பிரதிநிதிகள் இது 'புண்படுவது' என்பதை பற்றிய விஷயம் அல்ல, மாறாக பே பால் நிறுவனம், சாதி கொண்டாடப்பட வேண்டிய ஒரு விஷயம் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர். பே பால் நிறுவனம் தங்கள் ஊழியர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் எனவும், அணிகளின் பெயர்களை மாற்ற வேண்டும் எனவும் மீண்டும் வற்புறுத்தினர். பேபால் நிறுவனத்தின் செயல்பாட்டை பொறுத்து இந்த எதிர்ப்பு போராட்டத்தை தொடர்வது பற்றி சேவ் தமிழ்ஸ் இயக்கம் முடிவு செய்யும். கார்பரேட் செய்தித்தொடர்பு மேலாளர் அதற்கு ஒப்புக் கொண்டார்.

பின் அந்த மென்பொருள் பணியாளர்கள் தங்கள் அலுவலகங்களுக்கு விரைந்தனர்.

Comments

8 comments

8
‌இராமியா
இது ஒரு வெற்றியே அல்ல. தூசுப் படை என்று சொல்வார்களே, ‌அதை விட மிக மிக ......மிகக் குறைந்த வலிமை கொண்ட அணியை வெற்றி கொண்டதாகத் தான் இதைக் கொள்ள முடியும். உயர் சாதிக் கும்பலினர் இதை ஒரு பொருட்டாகவே நினைக்க மாட்டார்கள். வேண்டுமானால், வெற்றி அடைந்து விட்டதாக நாம் நினைத்து அச்செருக்கில் நம் கடமையை மறந்து இருப்பதற்காக நம்மிடம் நடிக்கலாமே ஒழிய உண்மையில் அவர்களுக்கு இது ஒரு தோல்வியே அல்ல. சாதியப் பிரச்சினையின் வேர் எதுவென்றால், திறமைக் குறைவான பார்ப்பனர்களும் அதிகாரம் இல்லாத, ஊதியம் குறைந்த, உடலுழைப்பு மிகுந்த வேலைகளில் இருந்து தப்பி, சொகுசான வேலைகளைப் பெற்று விடுவதும், ஒதுக்கப்பட்ட மக்களில் திறமையுள்ளவர்களை அப்படிப்பட்ட கடினமான வேலைகளில் ஈடுபட வைப்பதும் தான். பார்ப்னர்களில் உள்ள திறமைக் குறைவானவர்கள் அதிகாரம் இல்லாத, ஊதியம் குறைந்த, உடலுழைப்பு மிகுந்த வேலைகளில் இருந்து தப்பி விடக் கூடாது என்ற போரை முன்னெடுத்து வெற்றி பெறுவது தான் உண்மையான வெற்றியாக இருக்கும்.
R. Subramanian Iyer
திறமையானவர்கள் எல்லா விதத்திலும் வெற்றி பெற
வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
arunan
People who are said to be upper caste, have never worked for 1000 years.
They never produced food or road, building,farming, or any kind of physical work. Its all of us who made them to sit and eat for years and years.
And in the name of 'corporate', they still supress the others ; it happens in every company-Banks , softwares, college and even in supreme court.
Its time to remove their cholestrol
che
ஐடி ஊழியர்களின் போராட்டம் எப்படி இருந்தாலும் வரவேற்க்கபட வேண்டியது
இராமியா
ஐயா, சுப்ரமணியன் ஐயர் அவர்களே, திறமையானவர்கள் எல்லாவிதத்திலும் வெற்றி பெற வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்று பொத்தாம் பொதுவாகச் சொல்வது மின் விளக்கை வாயால் ஊதி அணைக்க முயல்வது போன்றது. அறிவுத் திறன் என்பது அனைவருக்கும் பொது. பார்ப்பனர்களில் அறிவுத் திறன் மிகுந்தோர், இடைநிலை அறிவுத் திறன் கொண்டோர், குறைந்த அறிவுத் திறன் உடையோர் என அனைத்து நிலை அறிவுத் திறன் உடையவர்கள் இருக்கிறார்கள். அது போலவே சூத்திரர்கள், பஞ்சமர்கள், இஸ்லாமியர்கள், கிருத்தவர்கள் என அனைத்துப் பிரிவினரிலும் அனைத்து நிலை அறிவுத் திறன் உடையவர்கள் இருக்கிறார்கள். ஆனால் கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் சமூகத்தின் அனைத்து நடவடிக்கைகளிலும் பார்ப்பனர்கள் உயர்நிலைகளில் இருக்கிறார்கள். பார்ப்பனர்களில் உள்ள திறமைக் குறைவானவர்கள் அதிகாரம் இல்லாத, ஊதியம் குறைந்த, உடலுழைப்பு மிகுந்த வேலைகளைச் செய்வதில் இருந்து தப்பி, சொகுசான வேலைகளையே செய்கின்றனர். இது ஒடுக்கப்பட்ட மக்களில் உள்ள திறமைசாலிகள் கீழ் நிலை வேலைக‌ள‌ை‌ச் செய்தாக வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துகிறது. இது மனித வளத்தை வீணாக்கும் செயல். அதைவிடக் கொடுமை என்னவென்றால் திறமைக் குறைவான பார்ப்பனர்கள் அதிகாரம் இல்லாத, ஊதியம் குறைந்த, உடலுழைப்பு மிகுந்த வேலைகளைச் செய்வதில் இருந்து தப்பி, உயர்நிலை வேலைகளைச் செய்வதால் நிர்வாகம் சீரழிந்து நாட்டு முன்னேற்றம் தடைபடுகிறது. இது ஒரு தேசத் துரேகச் செயல். இவ்வாறு திறமை இல்லாத பார்ப்பனர்களைக் கீழ் நிலைக்கு அனுப்பாமல் உயர்நிலைகளில் தக்க வைத்துக் கொள்ளும் பார்ப்பனர்களும் தேசத் துரோகிகளே. இப்படிப்பட்ட தேசத் துரோக விசை நாட்டில் வியாபித்து இருக்கும் பொழுது வெறுமனே “திறமையானவர்கள் எல்லாவிதத்திலும் வெற்றி பெற வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை“ என்று கூறுவது இது போன்ற விவாதங்கள் நடைபெறக் கூடாது என்ற விருப்பத்தையும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டு விடக் கூடாது என்ற ஆதங்கத்தையும் காட்டுவதாகத் தான் கொள்ள முடியும். நீங்கள் இப்படிப்பட்டவர் அல்ல, உண்மையிலேயே சமூக அக்கறை உடையவர் என்றால், பார்ப்பனர்களில் உள்ள திறமைக் குறைவானவர்கள் அதிகாரம் இல்லாத, ஊதியம் குறைந்த, உடலுழைப்பு மிகுந்த வேலைகளைச் செய்வதில் இருந்து தப்ப முடியாதபடியான ஒரு வழியைச் சொல்லுங்களேன். அவ்வாறு திறமைக் குறைவான பார்ப்பனர்களை உயர்நிலைகளில் தக்க வைத்துக் கொள்ளும் தேசத் துரோகப் பார்ப்பனர்கள் தகுந்த தண்டனையில் இருந்து தப்ப முடியாதபடியான வழியையும் சொல்லுங்களேன்.
இராமியா
che அவர்களே,‌ஐ.டி.ஊழியர்கள் போராட்டமும் அவர்களது வெற்றியும் வரறே்கப்பட வேண்டியது தான். இதில் ஐயமே இல்லை. ஆனால் இது பெரிய வெற்றி என்று என்று நினைத்துக் கொண்டால் நாம் சறுக்கி விடுவோம் என்பதைத் தான் பதிவு செய்ய விரும்புகிறேன்.
இராசன் பார்த்தீபன்
சேவ் தமிழ் இயக்கத்தின் இந்த செயலை அன்போடு வரவேற்கின்றேன்.
பகுத்தறிவுடன் கூடிய விழிபுணர்வு வூட்டும் செயல் நம்பிக்கை கீற்றுகளை தோட்றுவிக்கின்றது
Guest
நனனுட்ய கடமை பர்பனியதை ஓழீப்தெ,

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.