பெரியார் திராவிடர் கழகம், தோழர் மரண கானா விஜி ஒருங்கிணைந்து நடத்தும் ஆதிக்க கலாச்சாரத்தின் எதிர்க் குரலாய் தோழர் மரண கானா விஜியின் கானா பாடல் இசை நிகழ்ச்சி

19.05.2011, மாலை 5.00 மணி

ஜெர்மன் அரங்கம், 17, பிரகாசம் தெரு, தியாகராய நகர், சென்னை -17

=============================================================================
தலைமை
கொளத்தூர் மணி

முன்னிலை
மைக்கேல், சிட்டு

வரவேற்புரை
சி.தமிழ்பிரபா

சிறப்புரை:
ஆனூர்  செகதீசன், துணைத் தலைவர், பெரியார் திராவிடர் கழகம்
விடுதலை இராசேந்திரன்
பேராசிரியர் சரசுவதி
மகேசு, காஞ்சி மக்கள் மன்றம்
=============================================================================
போராட்டங்கள், புரட்சிகள், போர்கள், சரித்திரங்கள், இயக்கங்கள் இவை எல்லாமே கலைஞனின் வாயிலாகத்தான் வெளிவருகிறது. ஆனால், அந்த கலைஞனுக்கு எவ்விதமான அங்கீகாரமும் கிடைப்பதில்லை. அதிலும் அவன் அடித்தட்டு கலைஞனாயிருந்தால் புறக்கணிப்பும், தோல்விகளுமே பரிசாக கிடைக்கிறது. எனவே ஆதிக்க கலாச்சாரத்தின் ஒட்டு மொத்த எதிர்க் குரலாய், தமிழிசையை தூக்கி விழுங்கிய பார்ப்பன சங்கீதங்களை உடைத்தெறிய கதை சொல்லி கானா பாடும் இசை நிகழ்ச்சியே இது.

நிகழ்ச்சியின் நோக்கம்

அடித்தட்டு மக்களின் கலையாகிய கானா, கிராமியப் பாடல்கள், பறை இசை போன்றவற்றை பயன்படுத்தி பெரியார், அம்பேத்கர் சிந்தனைகளை வீதி நாடகங்கள் மூலம் மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு ஆர்வமுள்ள தோழர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான பயிற்சி பட்டறை தொடங்குவதற்கும் தேவையான நிதி திரட்டுவதே  இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும்.

நுழைவுச் சீட்டு கிடைக்குமிடம்

தோழர். பத்ரி நாராயணன் நினைவு நூலகம், பெரியார் படிப்பகம், 73, இலாயிட்ஸ் சாலை, இராயப்பேட்டை, சென்னை – 14. தொடர்புக்கு: 99411 63468, 98847 54050

Pin It