கடந்த ஆண்டுகளைப் போலவே, இந்த ஆண்டும் கந்தர்வன் நினைவுச் சிறுகதைப்போட்டியைச் சிறப்பாக நடத்திடத் திட்டமிட்டுள்ளது தமுஎகச. 2007ஆம் ஆண்டு; ஜெயகாந்தனும், 2008ஆம் ஆண்டு பிரபஞ்சனும், 2009ஆம் ஆண்டு ‘பூ’திரைப்பட இயக்குநர் ‘சசி’யும் கலந்துகொண்டு பரிசு வழங்கினர். 2010ஆம் ஆண்டும் பரிசளிப்பு விழா புதுக்கோட்டையில் சிறப்பாக நிகழும்.
முதல்பரிசு - ரூ. 5,000
இரண்டாம் பரிசு - ரூ. 3,000
மூன்றாம் பரிசு - ரூ. 2,000
மற்றும் தேர்வுபெறும் கதைகளுக்கு ஆறுதல் பரிசுகளுடன் சான்றிதழும் வழங்கப்படும். கதைகள் சிறந்த இலக்கிய இதழ்களில் வெளியிடப்படும்.
விதிமுறைகள் :
@ ஒருவரே எத்தனை கதைகள் வேண்டுமானாலும் அனுப்பலாம்
@ கதையை எழுதியவர் அது தனது சொந்தக் கற்பனையே எனவும் வெளியிடப்படாதது எனவும் உறுதிதந்து, பெயர் முகவரி மற்றும் தொடர்பு எண்களைத் தனித்தாளில் எழுதி இணைத்து அனுப்ப வேண்டும்.
@ கதைப் பக்கங்களில் எழுதியவர் பெயர் விவரம் இருக்கக் கூடாது
@ வெளிநாடுகளில் இருப்போர் மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு, ஒருங்குறி (யூனிகோடு) எழுத்துருவில் சிறு கதைகளை அனுப்பலாம்.
@ அஞ்சல் உறையிலும், மின்னஞ்சலில் அனுப்புவோர் Subject பகுதியிலும் ‘கந்தர்வன் நினைவுச் சிறுகதைப் போட்டி’ என்று குறிப்பிட வேண்டுகிறோம்.
அனுப்ப வேண்டிய முகவரி :
கவிஞர் ரமா.ராமநாதன்,
மாவட்டச் செயலர்-த.மு.எ.க.ச.,
2 ஃ 435 பாரதி நகர்,
ஆலங்குடி - 622 301
புதுக்கோட்டை மாவட்டம்
தமிழ்நாடு
அலைபேசித் தொடர்புக்கு : 9865566151, 9443193293
மின்னஞ்சலில் கதைகளை அனுப்ப :