ஒரு சமூகம் புதிய எல்லைகளை தொட முனைகின்றபோதும், அல்லது அது அடிமைத்தளைகளிலிருந்து விடுபட முனைகின்றபோதும் சமூகம் தொடர்பான அறிஞர்களை உருவாக்கிக் கொள்கின்றது. அவ்வாறு சமூகம் வெளிப்படுத்திய முக்கிய ஆளுமைகளில் ஒருவர்தான் இலங்கை இடதுசாரி இயக்கத்தின் முன்னோடியாக திகழ்ந்த மு.காத்திகேசன் அவர்கள். இடதுசாரி இயக்கத்தின் வளர்ச்சிக்கு ஆரம்பகால முதலே உரம் ஊட்டியவர்களில் முதன்மையானவர்.

மு.காத்திகேசன் அவர்கள் நீண்டகாலமாக காலமாற்றங்களுக்கும் கருத்து மாற்றங்களுக்கும் முகம் கொடுத்து அவ்வக் காலங்களில் ஏற்பட்டு வந்த முரண்பாடுகளையும் போராட்டங்களையும் எதிர்கொண்ட விதம் தனித்துவமானது. அவர் ஆசிரியர், அதிபர், கம்யூனிட் கட்சியின் முக்கிய உறுப்பினர், எழுத்தாளர் என பல்துறை சார்ந்த ஆளுமைகளை உடையவர். அவரது சிந்தனைகள் செயற்பாடுகள் யாவும் மனிதர்களையும் அவர்களது செயற்பாடுகளையும் ஆக்கப்பூர்வமான திசையில் இட்டுச் செல்வதாகவே அமைந்திருந்தது. அவர் அவ்வப்போது எழுதி வெளியிட்ட நகைச்சுவைகள் தொகுக்கப்பட்டு நூலாக வெளிவந்துள்ளமை சிறப்பானதோர் அம்சமாகும். இந்நூல் குறித்த காய்த்தல் உவத்தல் அற்ற விமர்சனங்கள் தோன்ற வேண்டியது காலத்தின் தேவையாகும்.

காலத்தின் தேவையை நன்கறிந்து முற்போக்கு கலை இலக்கிய மன்றம் கம்யூனிஸ்ட் காத்திகேசன் அறக்கட்டளை நிதியத்துடன் இணைந்து அழகான முறையில் இத்தொகுப்பினை வெளியிட்டுள்ளனர்.

விலை. 375 ரூபா (இலங்கை விலை).

தொகுப்பு : சண்முக சுப்ரமணியம் 

வெளியீடு : முற்போக்கு கலை இலக்கிய மன்றம்

Pin It