'சென்போன் ரிங்' (கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது......)

"ஹலோ"

"வரதராஜன் சாரா"

"ஆமா, நீங்க யாரு"

"சார், நான் தான் உங்கள் வீட்டுல இருந்து 20 லட்சம் ரூபாயை திருடுனவன், நீங்க எவ்வளவு கவலையில இருப்பீங்கன்னு எனக்‍குத் தெரியும். நான் ஏன் திருடுனேன்னு ஒரு லெட்டர் எழுதி வச்சிருக்‍கேன். உங்க வீட்டு எல்.சி.டி. டி.வி.க்‍கு பின்னாடி அந்த லெட்டரை வச்சிருக்‍கேன். எடுத்து வாசிச்சுப் பாருங்க"

'டொக்‍'

"டேய்,......டேய்,.............. டேய்............யாருடா நீ...... டேய்........."

வரதராஜன் கைகள் நடுங்க டி.வி.யின் அருகில் சென்றார். அவரது கைக்‍கு அருகில் ஒரு மேளத்தை கொண்டு சென்றால் நடுங்கிக்‍ கொண்டிருக்‍கும் கை என்ன ராகத்தில் நடுங்கிக்‍ கொண்டிருக்‍கிறது என்பதை கண்டுபிடித்து விடலாம். பயத்தின் ராகம் இதுதான் என்று உலகத்துக்‍கு சொல்லிவிடலாம். ஆனால் இந்த நேரத்தில் யார் அத்தகைய முயற்சியை செய்வது.

கடிதத்தை எடுத்துப் பிரித்தார்.

திருநிறை வரதராஜன் அவர்களுக்‍கு.....

நேற்றுதான் பத்திரிகை ஒன்றில் உங்களைப் பற்றிய தகவல் ஒன்றைப் படித்தேன். உங்களின் சொத்து மதிப்பு 5 ஆயிரம் கோடியை தாண்டும் என்று அதில் எழுதியிருந்தார்கள். டீ குடிப்பதற்கு 2 ரூபாய் குறைவாக இருந்ததால் டீ குடிக்‍காமலேயே வீட்டிற்கு சென்ற என்னால் இந்த செய்தியை ஜீரணக்‍கவே முடியவில்லை. இரவெல்லாம் தூக்‍கம் இல்லை. 5 ஆயிரம் ரூபாய் சம்பாதிப்பதற்கு எவ்வளவு போராட வேண்டியதிருக்‍கிறது. நீங்கள் எல்லாம் தூங்கும்பொழுது கூட லட்சக்‍கணக்‍கில் சம்பாதித்துக்‍ கொண்டிருக்‍கிறீர்கள். எல்லோரும் சமமாகத்தான் பிறக்‍கிறோம், ஆனால் இந்த பணம் என்கிற விஷயம் எவ்வளவு பெரிய ஏற்றத்தாழ்வை நம்மிடையே ஏற்படுத்தி வைத்துவிட்டது. அன்று ஒருநாள் உங்களை சரவணபவன் ஹோட்டலில் பார்த்தேன். கையால் உணவை அள்ளி வாய் வழியாகத்தான் சாப்பிட்டுக்‍ கொண்டிருந்தீர்கள். அப்படி ஒன்றும் பெரிய வித்தியாசம் இல்லை மற்ற மனிதர்களுக்‍கும் உங்களுக்‍கும். இதையெல்லாம் சரி செய்ய வேண்டும். மனிதர்களுக்‍கிடையில் இவ்வளவு பெரிய வேற்றுமைகள் எல்லாம் இருக்‍கவே கூடாது. அதனால் தான் இந்த முடிவுக்‍கு வந்து விட்டேன்.

உங்கள் வீட்டிலிருந்து 20 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்ததற்காக என்னை திருடன் என்று முடிவு கட்டி விடாதீர்கள். அதற்கு உங்களுக்‍கு எந்தத் தகுதியும் இல்லை. எப்படி என்று கேட்கிறீர்களா? 

என்னுடைய மாதச் சம்பளம் ஐயாயிரத்து ஐநூறு ரூபாய். நான் தினமும் வேலைக்‍குச் செல்லும் வழியில் ஒரு பைத்தியக்‍கார பிச்சைக்‍காரனுக்‍கு 2 ரூபாய் கொடுத்து விட்டுச் செல்வேன். ஒருநாள் பணம் கொடுக்‍காமல் கடந்து செல்லும் போது என்னை அந்த பிச்சைக்‍காரன் முறைத்துப் பார்த்தான். மறுநாள் பணம் கொடுக்‍காமல் கடந்து செல்லும் போது அவனது கோபம் அதிகமானது. அதற்கு அடுத்தநாள் பணம் கொடுக்‍காமல் அவனைத் தாண்டிச் சென்ற போது, என்னை தாவிப்பிடித்து சட்டைப்பைக்‍குள் கையை விட்டு மொத்தமாக சில்லறையை அள்ளி அதில் 2 ரூபாயை மட்டும் எடுத்துக்‍ கொண்டு மீத பணத்தை என் பாக்‍கெட்டக்‍குள் போட்டுவிட்டுச் சென்றுவிட்டான். அவன் அவனுக்‍குத் தேவையான பணத்தை எடுத்துக்‍ கொண்டான். அதற்கு மேல் அவனது தேவை இல்லை என்பதால், அவனது தேவையை நிறைவேற்றிக்‍ கொள்ள பணத்தை எடுத்துக்‍ கொண்டான்.

அவன் ஏன் திருட வேண்டும், வேலை செய்து பிழைத்துக்‍ கொள்ள வேண்டியதுதானே என்றெல்லாம் சொல்லத் தோன்றும். அவன் மேல் சட்டை இல்லாமல், ட்ரவுசரும் இல்லாமல், (கோமணம் மட்டுமே கட்டியிருப்பான்) ஒரு இடத்திற்குச் சென்று வேலை கேட்டால் அவனை அடித்துத் துரத்துவார்கள். நல்ல சட்டை எங்கேனும் கடன் வாங்கி போட்டுக்‍கொண்டு சென்று வேலை கேட்டால் எந்த ஊர், யார் அப்பா, அம்மா, யாரையாவது ஜாமீன் கொடுக்‍கச் சொல் என்று கூறுவார்கள். மேலும் பலநாள் பிச்சையெடுக்‍கக்‍ கூடிய சூழ்நிலையில் இருக்‍கும் ஒருவனின் மனநிலை எவ்வளவு கெட்டுப் போயிருக்‍கும் என்று உங்களால் கற்பனை கூட செய்ய முடியாது. அவனைப் போன்ற பிச்சைக்‍காரர்களுக்‍கு உதவி தேவை. அதை இந்த சமுதாயத்தால் புரிந்து கொள்ளவே முடியாது. சமுதாயத்தைப் பொறுத்தவரை பிச்சைக்‍காரர்கள் என்பது சாபக்‍கேடு. அந்தப் பிச்சைக்‍காரனுக்‍கும் அவனது வாழ்க்‍கை ஒரு சாபக்‍கேடுதான்.

உங்களுக்‍கு சொல்லவந்த விஷயம் இதுதான். நான் பிச்சைக்‍காரனாக இருக்‍க விரும்பவில்லை. 100 கோடி மக்‍கள் வாழும் இந்தியாவில் ஒருவருக்‍கு 5 ஆயிரம் கோடி சொத்து இருப்பது நியாயமே இல்லை. நீங்கள் ஒருநாளைக்‍கு 3 வேளை தானே சாப்பிடுகிறீர்கள். உங்களுக்‍கு சுகர் என்று கேள்விப்பட்டேன். அந்த 3 வேளை உணவையும் உங்களால் நிம்மதியாக சாப்பிட முடியாது. பிறகு எதற்கு உங்களுக்‍கு இவ்வளவு பணம். நீங்கள் வசதியாக வாழ்வதற்கு ஒருவீடு, அலங்காரமான உடைகள், போக்‍குவரத்துக்‍கு சொகுசான வாகனங்கள் இவற்றையெல்லாம் நிறைவேற்றிக்‍ கொள்ள உங்களிடம் இருக்‍கும் பணத்தில் 5 ஆயிரத்தில் ஒரு பங்கு பணம் போதுமே!!!!! அப்படி இருக்‍கையில் எதற்காக இவ்வளவு பணம் உங்களுக்‍கு, இவ்வளவையும் சேர்த்து வைத்து என்ன செய்யப் போகிறீர்கள். அதனால் உங்களிடமிருந்து 20 லட்சம் ரூபாய் எடுத்துக்‍ கொண்டதை அந்தப் பிச்சைக்‍காரன் எடுத்துக்‍ கொண்டதைப் போல் நினைத்துக்‍ கொண்டு அமைதியாக இருப்பது தான் உங்களுக்‍கு நல்லது மற்றும் நியாயமானதும் கூட.

உங்களைப் போன்றவர்கள் இப்படி கண்மண் தெரியாமல் பணத்தை ஒரே இடத்தில் குவித்தால் பின் 5 ஆயிரம் ரூபாய் சம்பாரிப்பவன் ஒரு பிச்சைக்‍காரனாக திரியாமல் வேறு என்ன செய்ய முடியும். உங்களுக்‍கு பெட்ரோல் விலை உயரும் போது மனம் வலிப்பதைப் பற்றித் தெரியுமா? பால் விலை உயர்ந்த பின்னர் எத்தனை பேர் டீ குடிப்பதை நிறுத்திவிட்டார்கள் என்பது உங்களுக்‍குத் தெரியுமா? நான் அலுவலகத்திற்கு சட்டையை தேய்த்துப் போடாமல் செல்கிறேனாம் உயரதிகாரி திட்டுகிறார். அது ஏன் என்று உங்களுக்‍குத் தெரியுமா. ஒரு சட்டையை தேய்ப்பதற்கு 5  ரூபாய் கேட்கிறார்கள். கடந்த 5 முறை நான் வாங்கிய கியாஸ் விலை ஒன்று போல் இல்லை. முதல் மாதம் 320 ரூபாய், அடுத்த மாதம் 390 ரூபாய், அதற்கு அடுத்த மாதம் 420 ரூபாய், அதற்கு அடுத்த மாதம் 510 ரூபாய். இன்னும் வேறு கியாஸ் விலை உயருமாம். நான் என்ன செய்வது, இல்லை என்னைப் போன்றவர்கள் தான் என்ன செய்ய முடியும்.

5 ஆயிரம் கோடி ரூபாய் என்பது மிக அதிகம் ஐயா.............சற்று சிந்தித்துப் பாருங்கள். உங்களால் அதை வைத்துக்‍ கொண்டு என்ன செய்ய முடியும். உடலுக்‍கு முடியாமல் காய்ச்சல் வந்து விட்டால், கண்டிப்பாக மருத்துவரை சென்று பார்க்‍க வேண்டுமா? ஏன் அதுவாக சரியாகிவிடாதா, என்று எத்தனை முறை யோசித்திருக்‍கிறேன் தெரியுமா? நான் பேருந்தில் பயணம் செய்து பல மாதங்கள் ஆகிவிட்டது. அது ஏன் என்று காரில் மட்டுமே சென்று கொண்டிருக்‍கும் உங்களுக்‍கு எடுத்துச் சொன்னால் புரியுமா, புரியாதா என்று தெரியவில்லை.

கப்பல் விபத்துக்‍குப் பின் கடலில் தத்தளிப்பவர்களின் பதைபதைப்பு பற்றி உங்களுக்‍குப் புரியுமா? உயிர் பிழைப்போமா, பிழைக்‍கமாட்டோமா என்று தெரியமால், பற்றிக்‍கொள்ள எந்த விதமான பிடிப்பும் இல்லாமல் இருப்பவர்களின் நிலைமை பற்றி ஏதாவது தெரியுமா?

நியாயமாக ஒரு விவாதத்துக்‍கு வருவோம். யார் உண்மையான திருடன். எது உண்மையான திருட்டு என்று.

* 5000 பேர் வாழ வேண்டிய பணத்தில் நீங்கள் ஒருவர் மட்டும் வாழ்ந்து கொண்டிருக்‍கிறீர்களே, 5 ஆயிரம் கோடியை நீங்கள் ஒருவர் மட்டும் பதுக்‍கிக்‍ கொண்டிருக்‍கிறீர்களே. அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தில் வரும் திருடர்களுக்‍கும், உங்களுக்‍கும் என்ன வித்தியாசம் இருக்‍கிறது.

* நான் ஏன் அண்டாகு ஹசம், அபூகா ஹிஹூம் என்று சொல்லி உங்கள் பணத்தில் இருந்து சற்று எம்.ஜி.ஆ.ரைப் போல் எடுத்துக்‍ கொள்ளக்‍ கூடாது.

* ஒரு கல்யாண விருந்தில் யாரையும் விட மாட்டேன் என நீங்கள் மட்டும் சாப்பிட்டுக்‍ கொண்டிருந்தால் அது எப்படி. உங்களால் அப்படி எவ்வளவுதான் சாப்பிட முடியும். 5 ஆயிரம் பேர் சாப்பிடுவதற்குரிய உணவு இருந்தும் நீங்கள் மட்டும் அனைத்தையும் கவர்ந்து கொண்டு சாப்பிட்டுக்‍ கொண்டிருந்தால் அது ஒருவித திருட்டு இல்லையா?

* நான் உங்கள் வீட்டிற்குள் புகுந்த இன்று 20 லட்சம் ரூபாயை எடுத்துக்‍ கொண்டேன். ஆனால் அதைவிட வசதியாக நீங்கள் உங்கள் வீட்டுக்‍குள்ளேயே உட்கார்ந்து கொண்டு அனைவருடைய பணத்தையும் அவர்களுக்‍கே தெரியாமல் எடுத்துக்‍ கொள்கிறீர்கள். உண்மையை கூறுவதென்றால் என்னை விட ​ஹைடெக்‍ திருடன் நீங்கள்தான்.

எனக்‍கு நிறைய பிசினஸ் ஐடியாக்‍கள் உள்ளன. அந்த ஐடியாக்‍களை எத்தனை நாட்கள்தான மனதிற்குள்ளேயே புதைத்துக்‍ கொண்டு வெறுமனே சம்பளத்திற்கு வேலை செய்து கொண்டிருப்பது. உங்கள் பணத்தைக்‍ கொண்டு நான் தொழில் தொடங்கப் போகிறேன். வேண்டுமென்றால் இதில் வரும் லாபத்தில் வேறு ஒரு இளைஞனுக்‍கு தொழில் தொடங்குவதற்கு உதவி செய்து, 20 லட்ச ரூபாய் கடனை அடைத்து விடுகிறேன். ஆனால் உங்களுக்‍கு மட்டும் 20 லட்சம் ரூபாயை கொடுக்‍கவே மாட்டேன். உங்களிடம் உள்ள 5 ஆயிரம் கோடியில்தான் எத்தனை 20 லட்சங்கள் உள்ளன. பின் உங்களுக்‍கு எதற்கு இந்தப் பணம். அளவோடு பணம் சேர்த்து மகிழ்வோடு வாழ உங்களை வாழ்த்துகிறேன்.

இப்படிக்‍கு தங்கள் உண்மையுள்ள

எக்‍ஸ் மேன்

Comments

10 comments

10
A.Venis
Very very nice...
Mohamed Rasik
மிக கூரிய கருத்து.... அழகிய தொகுப்பு. வாழ்த்துக்கள்.
Larry Fox
கால கடனுக்கு மிக குறைந்த வட்டி விகிதத்தில் கடன் திருமணம் செய்ய?

நீங்கள் வெற்றி இல்லாமல் வங்கிகள் கடன் பெற முயற்சி? அவசரமாக கடன் வெளியே பணம் தேவை? உங்கள் சொந்த வணிக விரிவாக்கம் அல்லது ஸ்தாபனத்தின் பணம் வேண்டும்?. நாம் அனைவரும் 3% குறைந்த வட்டி விகிதம் 5,000 நம்மை டாலர்களில் 5,000,000.00 வரை கடன் தொகை நீண்ட மற்றும் குறுகிய கால கடன்கள், பவுண்டுகள் ஸ்டெர்லிங், யூரோ, ச்ழ்க் போன்றவை வழங்கும் நொர்ல்ட்.தெ பயன்பாட்டு பகுதிகள் 18 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் யார் விண்ணப்பதாரர்கள் கிடைக்கிறது.

மேலும் தகவலுக்கு, மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொள்க: 24ஹொஉர்லொஅன்செர்விசெ@க்மைல்.சொம்
ரெகர்ட்ச்
லாரி ஃபாக்ஸ்
surya
ஒண்ணுமே புரியல லேரி ஃபாக்‍ஸ்... எழுத்து கூட்டி வாசித்ததில் குத்துமதிப்பாக புரிந்து கொள்ள முடிகிறது. எதற்காக திருட வேண்டும். கடன் வழங்கத்தான் ஏராளமான நிறுவனங்கள் இருக்‍கின்றனவே என்று கூறுவதாக எடுத்துக்‍ கொள்கிறேன். இதை திருட்டை நியாயப்படுத்துவதாக எடுத்துக்‍ கொள்ள வேண்டாம். இதில் திருட்டு என்பது ஒரு நகைச்சுவைப் போக்‍குக்‍காக மட்டுமே கையாளப்பட்ட விஷயம். ஆனால் இதில் குறிப்பிடத்தக்‍க வலிமையான ஆதங்கம் ஒன்றும் உள்ளது. ஒரு பக்‍கம் மட்டும் அநியாயத்துக்‍கு குவியும் பணமும், மற்றொரு புறம் மிகக்‍ கேவலமான வறுமையும் சகித்துக்‍ கொள்ள முடியாத விஷயம். ஒரு நாட்டின் 80 சதவீத வளத்தை சில நூறு பேர் தங்களுக்‍குள் முடக்‍கி வைத்துக்‍கொண்டால், மிச்சமுள்ளவர்கள் என்ன செய்ய முடியும். சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும். ஏதாவது மிச்சம் வைத்தால் தானே முயற்சி​செய்து, கடன்வாங்கி முன்னேறுதல் போன்றவை எல்லாம் நடந்தேற முடியும். ஒட்டு மொத்தமாக சுருட்டி வைத்துக்‍ கொண்டால் என்ன செய்வது. கொள்ளைதான் அடிக்‍க வேண்டும் என்று விளையாட்டாகத்தான் சொல்லிக்‍ கொள்ளத்தான் முடியும். இதை அவரவர் மனநிலையில்.... கண்ணோட்டத்தில் இருந்து பார்க்‍கும் போதுதான் புரிந்து கொள்ள முடியும். 2 கிழிந்த சட்டையை வைத்துக்‍ கொண்டு எந்த சட்டை குறைவாக கிழிந்திருக்‍கிறது என்று பார்த்து போட்டுக்‍கொள்பவனின் மனநிலையில் இருந்து பார்க்‍கும் போதுதான் கோபம் வரும். 4 பேரை வாழ விடாமல் தடுக்‍கும் போது அவர்கள் பறித்துக்‍கொள்ளத்தான் முயற்சிசெய்வார்கள். 5 ஆயிரத்திலிருந்து 50 கோடி வரை கடன் கொடுப்பதாக கூறப்பட்டது போல் தெரிகிறது. தொழில் தொடங்குவதற்கு ஒரு லட்சம் ரூபாய் கடன் கேட்டு அலைந்த கதையை ஒரு நாவல் அளவுக்‍கு எழுதலாம். அவ்வளவு தடைகள் உள்ளன. நீங்கள் எளிதாக கூறிவிட்டீர்கள். கடன் என்பது 50 ஆயிரம் வைத்திருப்பவனுக்‍கு, ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து வாங்குவது. இதுதான் இங்கு நடந்து கொண்டிருக்‍கும் கொடுக்‍கல் வாங்கல். நாட்டில் 80 சதவீதத்தினரின் ஒருநாள் வருமானமே 40 ரூபாய்தான் என்கிற போது, இவ்வளவு சாதாரணமாக கடன் வாங்கிக்‍ கொள்ள வேண்டியதுதானே என்று சொல்வது, தின்பதற்கு சோறு இல்லையென்றால் கேக்‍ சாப்பிட வேண்டியதுதானே என்று சொல்வது போல் இருக்‍கிறது.
இராமியா
திரு.எக்ஸ்மேன் அவர்களே! உன் கடிதமோ அல்லது நீ திருடிய ரூ.20 லட்சமோ என்னை அதிர்ச்சிக்கு ஆளாக்கி இருக்கும் என்று எதிர்பார்த்தால், நிச்சயம் நீ ஒரு ஏமாளியே. நீ கொண்டு (திருடிய என்ற வார்த்தையை உபயோகிக்கவே இல்லை என்பதைக் கவனி) போன பணத்தில் கள்ள நோட்டுகளும் உண்டு என்பதை அறிவாயா? அதை உபயோகிக்கும் போது நீ மாட்டிக் கொள்வாய் என்பது உனக்குத் தெரியுமா? அப்படி நீ மாட்டிக் கொள்ளும் பொழுது கள்ள நோட்டுக் கும்பலைச் சேர்ந்தவர்கள் (அவர்களுடன் எனக்கும் தொடர்பு உண்டு) மீது போடப்பட்டு இருக்கும் வழக்குகள் உன் மீது திருப்பப்பட்டு என்னைச் சேர்ந்தவர்கள் தப்புவதற்கு உதவி செய்யப் போகிறாய் என்பதும் அப்பொழுது நீ தான் அதிர்ச்சி அடையப் போகிறாய் என்பதை நீ சற்றும் எதிர்பார்க்கமாட்டாய். நீ எங்கள் (அதாவது முதலாளிகளின்) பலத்தைப் பற்றியும் பலவீனத்தைப் பற்றியும் சிறிதும் புரிந்து கொள்ளவில்லை.

சரி! நீ கள்ள நோட்டுப் பிரச்சினையில் சிக்காமல் வெற்றிகரமாகச் சமாளித்து விட்டாய் என்றால், மேற்கொண்டு உன் திட்டம் என்ன? தொழில் தொடங்கப் போவதாக நீயே உன் கடிதத்தில் எழுதி இருக்கிறாய். அப்படி என்றால் என்ன? நீ எங்கள் கூட்டத்தில் சேரத்தான் ஆசைப்படுகிறாய். எங்கள் கூட்டத்தில் (அதாவது முதலாளியாக) இருந்து கொண்டு காலம் தள்ளுவது சாதாரண விஷயம் என்று நினைத்து விடாதே. எல்லா விதமான தகிடுதத்தங்களையும் வெற்றிகரமாகச் செய்யத் தெரிந்தவர்களால் தான் எங்கள் கூட்டத்தில் (அதாவது முதலாளியாக) நிலைத்து இருக்க முடியும் என்பதைத் தெரிந்து கொள். ஆகவே நீ என்னிடம் இருந்து கொண்டு பணம் நீ இப்பொழுது கொண்டுள்ள மனநிலையில் உனக்கு எந்த விதத்திலும் பயன்படாது. நீ எங்களைப் போல் மனித உழைப்பை உறிஞ்சும் ‌குணத்ததைப் பொற்றால் தான் அப்பணம் உனக்குப் பயன்படும்.

என் அருமை எக்ஸ்மேன்! இன்றைய சமூக அமைப்பு எங்களுக்குப் (அதாவது முதலாளிகளுக்குப்) பாதுகாப்பு அளிப்பதற்குத் தான் இருக்கிறது. குற்றம் செய்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை என்பது எல்லாம் வெறும் கண்துடைப்பு. முதலாளித்துவ அமைப்புக்கு எதிராக நடப்பவர்கள் மீது நடவடிக்கை ‌என்பது தான் உண்மை. நீ எடுத்துச் சென்ற பணம் உன்னை முதலாளியாக்கி விட்டால், ஒரு வேளை நீயும் நானும் கூட்டு சேர்ந்து தொழில் தொடங்கும் காலமும் வரலாம். யார் கண்டது?

என் அருமை எக்ஸ்மேன்! நீ ஏழை என்று நினைத்துக் கொண்டு இருக்கும் வரையில் உனக்கு விடிவு காலம் இல்லை. நீ உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவன் என்று உணர்வதில் தான் உன் விடுதலைக்கு வழி இருக்கிறது. ஏழ்மை தான் சமூக மாற்றத்திற்கு உந்து விசை என்று நினைப்பது மிகவும் தவறு. அப்படி‌ இருந்தால் பிச்சைக்காரர்கள் ஒன்று சேர்ந்து புரட்சி செய்யலாம் அல்லவா? உலக வரலாற்றில் பிச்சைக்காரர்கள் புரட்சியில் கலந்து கொண்டதாக ஒரு சான்றும் இல்லை. (ஆகவே தான் எங்கள் சாத்திரங்கள் பிச்சைக்காரர்கள் நிலைத்து இருக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்குப் பிச்சை இடுவது புண்ணியம் என்று கூறுகின்றன.) புரட்சிக்கான உந்து விசை விடுதலை உணர்வே. விடுதலை உணர்வு இருந்தால் சமூக மாற்றம் வேண்டும் என்றும், அதற்கு மக்களை ஒன்று திரட்ட வேண்டும் என்றும் தான் தோன்றுமே ஒழிய, எங்களிடம் உள்ள பணத்தைக் கொண்டு போய், எங்கள் கூட்டத்தில் சேர்ந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தும் வழியில் போகத் தோன்றாது.

உனக்கு உண்மையில் எங்களை (அதாவது முதலாளிகளை) எதிர்க்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், முதலாளித்துவ அமைப்பில் முதலாளிகளுக்கு மட்டும் தான் சுதந்திரம் உண்டு என்பதையும் சோஷலிச சமுதாயம் அமைந்தால் தான் உழைக்கும் மக்களுக்குச் சுதந்திரம் கிடைக்கும் என்பதையும் மக்களுக்குத் தெரிய வை. மக்கள் இந்த உண்மையைப் புரிந்து கொள்ளாத வரைக்கும் எங்கள் பாடு கொண்டாட்டம் தான்.
surya
சரி
இராமியா
மகிழ்ச்சி தோழர் சூர்யா அவர்களே!
ஓஷோ
மார்க்ஸ், ஸ்டாலின், லெனின் போன்றவர்களின் முழு அரசியல் தத்துவமே, எல்லா பணக்காரர்களையும், ஏழைகளின் நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்பதே. இதுதான் கம்யு+னிஸ தத்துவத்தின் அடிப்படைக் கொள்கை. ஆனால், என்னைப் பொறுத்தவரை இது முட்டாள்தனமானது. என்னுடைய கருத்து என்னவென்றால் ஏழைகளை, கொஞ்சம் கொஞ்சமாக பணக்கார நிலைக்கு உயர்த்த வேண்டும் என்பதே. என்னுடைய சமூகத்தில் பாகுபாடே இருக்காது. ஆனால், அதில் பணக்காரர்கள்தான் இருப்பார்கள்.

- ஓஷோ
இராமியா
ஓஷோ அவர்களே! நீங்கள் பொதுவுடைமைத் தத்துவத்தைப் புரிந்து கொள்ளவில்லை என்பது மட்டுமல்ல; முதலாளித்துவ சமூகத்தின் அடிப்படையையும் புரிந்து புரிந்து கொள்ளவில்லை என்று உங்கள் எழுத்துக்கள் தெரிவிக்கின்றன. பொதுவுடைமைக் கொள்கை உற்பத்தி முறையில் மாற்றம் கொண்டு வருவதைத் தான் வற்புறுத்துகிறது. சமூகத்திற்குத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்வதை ஒருங்கிணைந்த திட்டமிடலாகக் கொள்ளாமல், தனியார்களின் மனம் போன போக்கில் விடுவதால் மிகை உற்பத்தியும், அதன் காரணமாகப் பொருளாதார நெருக்கடியும் மக்களை வாட்டு‌வதைக் காட்டி, சரியான திட்டமிடலின் கீழ் அதைக் கொண்டு வந்து உழைக்கும் அனைவரும் அனைத்தும் பெற வேண்டும் என்பது தான் பொதுவுடைமைக் கொள்கையின் அடிப்படை. நீங்கள் கூறுவது போல் பணக்காரர்களை ஏழைகளாக்க வேண்டும் என்பதற்காக அல்ல. முதலாளித்துவ உற்பத்தி முறையில் உடையவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் இடையிலான இடைவெளி குறையவில்லை என்பது ஒரு பக்கம் இருக்கட்டும்; அதிகரிக்காமலே இருந்தில்லை. அப்படி இருக்க ஏழைகளே இல்லாத சமூகத்தை இந்த அமைப்பில் எப்படி உருவாக்குவீர்கள்? அது போகட்டும். முதலாளித்துவ உற்பத்தி முறை சமூக ஏற்றத் தாழ்வை விட மிகப் பயங்கரமான ஆபத்து ஒன்றை இப்பொழுது கொண்டு வந்து இருக்கிறது. அது தான் புவி வெப்ப உயர்வு. முதலாளித்துவ உற்பத்தி முறையில் அதிக லாபம் அளிக்கும் பொருட்களைத் தான் உற்பத்தி செய்ய முடியும். ஆயுதங்கள், கார்கள் போன்ற தனி வாகனங்கள், குளிர் சாதனங்கள் ஆகியவை அதிக லாபம் ஈட்டித் தருகின்றன என்பதால் அவை அதிகமாக உற்த்தி செய்யப்படுகின்றன. அவை பயன்படுத்தப் படும் பொழுது கார்பன் டை ஆக்ஸைட், குளோரோ புளோரோ கார்பன் அகியவை வெளிப்பட்டு புவி வெப்பத்ததை மேலும் மேலும் அதிகரித்து இப்புவியை அழிவுப் பாதையில் இட்டுச் செல்கின்றன. விவசாயமும் மரம் வளர்த்தலும் குறைந்த லாபத்தை அளிப்பதாலும் பல சமயங்களில் நஷ்டத்தைக் கொடுப்பதாலும் அவை புறக்கணிக்கப்படுகின்றன. இந்நிலையை மாற்றி புவி வெப்பம் உயர்த்தும் பொருட்களின் உற்பத்தியைக் கட்டுப்படுத்தி, புவி வெப்ப உயர்வைத் தடுக்கவும், விவசாயத்ததையும் மரம் வளர்த்தலையும் பெருக்கி ஏற்கனவே உயர்ந்த வெப்பத்தைக் குறைக்கவும் முதலாளித்துவ உற்பத்தி முறையினால் நிச்சயமாக முடியாது.

திட்டமிட்ட உற்பத்தி முறை‌யும் லாபத்தை அடிப்படையாகக் கொள்ளாமல் மக்கள் நலனை மட்டுமே அடிப்படையாகக் கொள்ளும் முறையுமான ‌‌சோஷலிச முறையினால் தான் முடியும். இதுவரைக்கும் உழை‌க்கும் மக்களின் சுதந்திரத்திற்காகத் தான் ‌‌சோஷலிச முறை‌ ‌தேவை‌ என்ற நிலை‌ இருந்தது. ஆனால் இப்பொழுது புவி‌ வெப்ப உயர்வில் இருந்து இம்மண்ணுலகைக் காப்பதற்கே‌ சோஷலிச உற்பத்தி முறை‌ அவசியம் என்று ஆகி இருக்கிறது. ‌பொதுவுடைமைத் தத்துவத்தைப் பற்றிய பொய்ப் பிரச்சாரங்களில் இருந்து வெளியில் வந்து சோஷலிச உற்பத்தி முறை‌க்கான விழிப்புணர்‌வை‌யும் ‌‌பொதுக் கருத்தை‌யும் உருவாக்குவது இவ்வுலகம் அழியக் கூடாது என்று விரும்பும் அனைவருடைய கடமையாகும்.
திரு ஆஉச்டினெ
வணக்கம் வாடிக்கையாளர்.
புதிய மற்றும் கடன் அனுபவிக்க.
அவரது கடன் விண்ணப்பத்தை, நான் உங்கள் கடன் விண்ணப்பம் இன்னும் செல்லுபடியாகும் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன். அவர்கள் எப்போதும் நீங்கள் கடன் கொடுக்க உதவ தயாராக இருக்கிறார்கள். அதனால் நான் 1,000 + 5,000,000 இருந்து மானியம் (கடன்) ஒரு தனியார் கடன் கடன் தான்.

எனவே, அனைத்து தேவைகளையும்
நிதி, உங்களுக்கு உதவ உங்கள் வசம் இருக்கும் மற்றும் அனைத்து உங்கள் நிதி பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். எனவே, உங்கள் கடன் விண்ணப்பம், நான் நீங்கள் கடன் வாங்க வேண்டும், எவ்வளவு, நீங்கள் கடன் தொகை அறிய விரும்புகிறேன்?, நான் என் கடன் அடிப்படையில் நீங்கள் உங்கள் பதில் காத்திருக்கின்றன.
நான் நீங்கள் கேட்க காத்து கொண்டிருக்கிறேன்.

நீங்கள் நல்ல நாள், நீங்கள் நன்றி நன்றி.

மின்னஞ்சல்: [email protected]

திரு Austine

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.