சுவர் ஆணியில்
தொங்கவிடப்பட்ட
சட்டையிலும் ...

மெத்தை மேல்
உறங்கி கொண்டு
இருக்கும் தலையணையின்
மேல் உறையிலும்....

கடைசியாக எழுதப்பட்ட
உறவினரின் விலாசம்
அடங்கிய பதிவு ஏடுவிலும்...

இருக்கையின்
கை பகுதிலும்
சாய் நாற்காலியின்
தலை பகுதிலும்...

அப்பாவின் வாசம்
எஞ்சி இருந்தது..
அவரின் சுவாசம்
மறைந்த பின்பும்....

- மணி ராமலிங்கம் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

2 comments

2
Venkat
Intha kavithaiku en kaneer samarpanam....
Guest
உங்கள் பகிர்வுக்கு நன்றி..

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.