நேற்று வரை
கிளறிக்கொண்டிருந்த
குப்பை மேட்டில்
புதிதாய்
எழும்பி விட்டது
கட்டிடம்

வெளியிலிருந்து
கொண்டு வந்த
வெள்ளைக்கோழிகளுக்கான
பண்ணைக்கென

சுற்றளவில்
சுருங்கி விட்டது
எங்களுக்கான
உணவு தேடும்
எல்லை

முன்னைப்போல்
எங்களிடம்
அன்பு காட்டுவதில்லை
முட்டை விலை
பற்றியே
முழு நேரமும்
சிந்திப்பவர்கள்

விரட்டப்படுவதும்
துரத்தப்படுவதும்
விதியாகிப்
போனது

சிதறிய தீனிகளை
பொறுக்கும் நிலையை
சிறகுகள் சிலிர்த்து
எதிர்த்துக் கேட்டால்

பார்க்கிறார்கள்
தீவிரவாதியைப்போல்

                 - க.ஆனந்த் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

1 comment

1
satheesh muthu gopal
very nice

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.