இயல்பை கீழே தள்ளி
ஏறி மிதித்துவிட்டு ஓடுகின்றன
செயற்கைகள்...
வாழ்க்கைக்கூடத்தில்
உணர்வுகளை கொண்டு
விளையாடுவதெப்படியென்று மட்டுமே
சொல்லித் தரப்படுகிறது...
எதுவும் தன் இயல்பில்
இருப்பதில்லை,
இயல்பு உட்பட....
அழிக்கமுடியாத ஒரு மாபெரும்
கருப்புப் புள்ளியில்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
சிறிதளவேனும் வெளுப்பு
தெரிந்தால் அது காட்சிப்பிழை
என்று எண்ணத் தோன்றுவதில்லை...
அழகான சித்திரமொன்றை
பாழ் செய்வதெவ்வாறென்கிற
முறை மட்டுமே இறுதியில்
தொக்குவது விசித்திரம்...
கீற்றில் தேட...
பாழ்படும் சித்திரம்
- விவரங்கள்
- ராம்ப்ரசாத்
- பிரிவு: கவிதைகள்