உனக்கும் எனக்குமான
இடைவெளியில்
பயணிக்கிறது
ஓர் மௌனம்....
மௌனம் வளர்க்கும்
அமைதியின்
ஊடலில் நீ...
மௌனம் உடைக்கும்
வார்த்தையின்
தேடலில் நான்...
இப்போது
ஊடலுக்கும் தேடலுக்குமான
இடைவெளியில்
பயணிக்கிறது
நம் காதல்...
கீற்றில் தேட...
இடைவெளி
- விவரங்கள்
- மணிராமலிங்கம்
- பிரிவு: கவிதைகள்