கோவில்
வாசலில் கழட்டி போட்ட
செருப்பு திருடப்பட்டு விடுமோ
உள்ளத்தில் செருப்புடன் தெய்வ வழிபாடு.
ஹைக்கூ
பொட்டலம் போடுபவனின்
ஒரு நிமிட சந்தோஷம்
ஆங்கில தினசரி நடிகை படம்
டிராபிக் சிக்னல்
முன் நின்ற கார்க் கண்ணாடியில்
முகம் பார்க்கும் பேருந்து
பேருந்து
காலி இருக்கை பிடிக்க
தள்ளிவிட்டு ஓடினான் சக பயணி.
பின் நின்ற பெரியவரிடம்
'உட்காரீங்களா?' எனக் கேட்க
கோபம் நட்பானது
விவாதங்கள்
சிலருக்கு இவை
திறமை காட்டும்
சந்தர்ப்பங்கள்
சிலருக்கு இவை
பிறரை மாற்ற
உதவும் கருவிகள்
சிலருக்கு இவை
அரிதாரமேற்கும்
அரங்கங்கள்
சிலருக்கு இவை
போதி மரங்கள்
இவற்றால் சில
உறவுகள் வலுப்பெறும்
சில உறவுகள்
அருப்பெரும்
இவை இருமுனை
கூர் ஆயுதஙகள்
கவனம் இருந்தால்
கனிகள்
கவனம் சிதறினால்
காயங்கள்
விளைவுகள்
கையாள்பவர் கையில்.
-தாமோதர கண்ணன் (