Poor manஎத்தனையோ நீச்சலடிக்க
அத்தனையும் தான் முந்தி
வித்தகனாய் மொட்டுடைத்து
கருப்பையின் உள்ளே
பொறுப்பாய் போனதுவே
இவன் செய்த முதல் சாதனை

உருகாமல் உடையாமல்
ஒரு இடத்தில் நீர் புற்றினுள்
ஒன்பது மாதங்கள் தவமிருந்து
இன்பமாய் இவ்வுலகில் வந்தது
இவனின் அடுத்த சாதனை

வறுமையில் பலர் உழன்றிருக்க
வெறுமென பலர் சோம்பியிருக்க
திறமையாய் பலர் லஞ்சம் வாங்க
நேர்மையாய் இவன் வேலை பார்த்தது
இவன் செய்த இளம் சாதனை

யாரோ..யாரோ.. இவன் யாரோ..
பெயரே தெரியா அவள் யாரோ
உயிரோ உடம்போ ஒன்றிணைந்து
பயிரோ களையோ பெற்றெடுத்தான்
இதுவோ இவனின் மண சாதனை

விதையை இவன் போட்டதினால்
சதையாய் வளர்ந்த ஒரு செடியை
நிதியாய் நீரை இவன் விட்டு
விதியால் வந்த களை புடுங்கி
மதியாய் வளர்த்த இளம் பயிரை
பொதியாய் தோளில் தூக்கி வைத்து
சதியால் இவன் ஏறா தூரத்தில்
பதமாய் கொண்டு சேர்த்ததுவே
இதுவரை செய்த சாதனையில்
இமாலய சாதனையாம்

கற்பனை பாரதி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

More articles by கற்பனை பாரதி

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.