Modelமின்னொளியால் ஒப்பனையூட்டப் பட்ட
பிம்பங்களைப் பெருக்கும்
கண்ணாடி அறையில்
வைக்கப் பட்டிருக்கின்றன
குதிகால் உயர்ந்த செருப்புகள்
தலைகீழாய் தொங்குமவை
வரிசையிலிருந்து விலகி
பிரவேசிக்கும் கால்களை உள்வாங்குகின்றன
கச்சிதமற்றவை
மீண்டும் அறையில் தொங்குகின்றன
அவற்றின் விருப்பமெல்லாம்
உயர்ந்தமேடையில் நடைபழகுவதும்
பருத்த பின்புறங்களை உயர்த்துவதும்
வெள்ளோட்டத்தில் அழுக்கடைந்தவை
மெருகேறத் துடைக்கப்படுகின்றன.
வெளிச்சத்தில் நிராகரிக்கப்பட்டவை
மின்னோட்டம் தடைபட்ட இரவுகளில்
தேர்ந்தெடுத்துக் கொள்கின்றன
தமக்கான கால்களை.


சுகிர்தராணி

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.