கீற்றில் தேட...


Lifeநாட்கள் பெரும்பாலும் தொடங்கும்
நல்லபடி, மெல்ல விடியும் கதிரும்

எழும் கீழ் வானில், பதறியதாய் எழும்
முழு மானிடமும் ஆலாய் பறக்கும்

கல்விக்கும் தொழிலுக்கும் காசுக்கும்
அல்லல் பட்டு தூரம் பல பயணிக்கும்

சிரிப்பு மறக்கும் சிந்தனை மறக்கும்
தரித்த உடுப்பின் உண்மை உருவம்

வரித்த தொழிலில் மாடாய் உழைக்கும்
நெரித்த புருவமும் முறைத்த கண்ணும்

மறந்த நல் உறவும் மறைந்த நட்பும்
துறந்த உறக்கமும் துவண்ட உடலும்

உடுக்கை மாற்றி உணவு புசிக்கும்
படுக்கை விரித்து தடுக்கி விழும்

தொடர்ந்து உடல், மனதில் அலுப்பும்
அடர்ந்து படர, அதன் உள் வலியும்

நாள் முடிய நள்ளிரவினில் அடங்கும்
நாளை மீண்டும் நல்லபடி தொடங்கும்

பாலசுப்ரமணியன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)