கீற்றில் தேட...


Poemமனக் கோட்டையின்
எண்ணக் கதவுகள்
உடைக்கப்படுவதால் ஏற்படும்
போர்!
போர்க்களம் ஒன்றுதான்...
போர்கள்தான் பல்லாயிரம்!
போர்க்களத்தில் சிந்திய
உயிர்மலர்களை சேர்த்து
செய்திட்ட மாலை!
வெற்றியின் தோள்களிலும்
தோல்வியின் கால்களிலும்!
அனைத்துமே கவிதைகள்தான்...!
கவிதைகளுக்கு கண்களில்லை...
ஆனாலும் பார்வையுண்டு!
கவிஞனின் கண்களில்
கவிதைகளின் பார்வை!
கவிதைகள் வடிக்கும்
கண்ணீரின் சுவையில்
எண்ணற்ற சுகங்கள்...
அதை
வடித்தவன் உணர்வுகளை
படித்தவன் உணர்ந்துவிட்டால்
கவிதைக்கு வெற்றி!
இனி போர்க்களம்
ஆயத்தமாகலாம்
அடுத்த போருக்கு!

இரா.சங்கர் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)