வருடங்கள் கடந்தாலும்
காத்திருப்புக்கள் முதிர்வதில்லை...
குழல்களில் சூடுவதானகற்பனைகளின் பூக்கள்
இன்னும் பிறந்திருக்கவில்லை...
எப்போது பிறக்குமென்கிற
தகவலுமில்லை...
துணைக்கான எதிர்பார்ப்புகள்
துணைகளிடம் நிரைவேறுவதற்கில்லை
என்பதே காத்திருத்தலில்
முடிகிறதென்பதை துணைகள்
நினைத்துப் பார்ப்பதில்லை...
கவனிக்கப்படாத வண்ணங்களின்
கலவைகளால்
வசீகரம் விரும்பப்படுகின்றது...
தொலைக்கப்படும் கலவைகளால்
தனித்தே விடப்படுகின்றன
எதிர்பார்ப்புகள்...
- ராம்ப்ரசாத் சென்னை (