கீற்றில் தேட...


ஓடும்போது-
கல்லடித்துப் பெயர்ந்த கால்விரல் நகத்தில்
அருகம்புல் மாட்டி இழுத்ததாய்
அப்படி வலி
உன் திருமணப் பத்திரிகை பார்த்தபோது

உள்ளங்காலில் ஒடிந்த முள்ளால்
ஊன்ற முடியாமல் ஊன்றி நடக்கும்
விறகுக் காரியாய்
உனைப் பார்க்கையில்
கண்களில் ரண தெறிப்பு

எப்படித் தீர்ப்பேன்
வாழ்க்கைக் கடன் கிடக்கட்டும்
பத்தாவது பரீட்சையின்போது
அவசரமாய்
ஐந்துசொட்டு ‘இங்க்’ தந்தாயே
அதையேனும்

பச்சியப்பன்