
சரிந்து கிடக்கிறார்கள்
அங்கொன்றும்
இங்கொன்றுமாக
அரங்கில் சிலர்
மேடைக்கு
பின்புறம் சென்று
பேசுபவரைக் குறித்து
தலையிலடித்துக் கொள்கிறார்கள்
பேசவிட்டவர்கள்
முடித்துக் கொள்ளுங்கள்
என்று கெஞ்சி
மூன்று சீட்டுகள்
கொடுத்தாயிற்று.
வெறிச்சோடிப் போயிருந்த
அரங்கின் மூலையில்
வெறுத்துப் போய் நிற்கிறார்கள்
கொள்கை பரப்ப முனைந்த
கூட்ட அமைப்பாளர்கள்
துணிந்து மேடையேறி
தடியூன்றி
ஒதுங்கி நிற்கிறான்
அரங்கின் காவல்காரன்.
ஆக மொத்தம்
பதினாறு பேர்
அலுத்துக் காத்திருக்கிறார்கள்,
காலத்தின் அருமை கருதி
ஒரு சில மணித்துளிகளில்
உரையை முடித்துக் கொள்வதாக
உறுதி கூறி
உரையாற்றத் தொடங்கியவருக்காக!
- ஜெயபாஸ்கரன் (