எங்கே சென்றது ஈர மண்?

Floodநூற்றாண்டுகளின் செயலினால்
நதிகளின் நீரோட்டம்
குவித்து சேமித்த
மணற்பெருக்கங்கள்

எங்கே சென்றன?

வானளாவி நிற்கும்
உயர் கட்டடங்களின்
உறுதியற்ற அடித்தளத்தில்
அமுங்கியதோ?

வடித்து வைக்கப்பட்ட
நதி படலத்தினின்றும்
அத்துமீறி
வார்க்கப்பட்டதோ?

வறண்ட நிலங்களின்
பிடிப்பற்ற பரப்பெங்கிலும்
பாகாய் தகிக்கிறது
மஞ்சற் பூமி

இயற்கை நீர்நிலைகள்
சீர்குலைத்த
மனித செயல்பாட்டால்
இன்று
தூர்த்துவிட்ட நீரூற்றுகளும்
நதிதேடி கலக்கவரும்
காட்டாற்று வெள்ளமும்

ஈரமண்ணின் ஈர்பற்று

மெல்ல
நகர்புறம் நோக்கிய
முற்றுகை துவங்கும்

ஏய்க்கப்பட்ட கடுஞ்சினத்துடன்


விஜய்கங்கா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.