Child Labourஉறவுப் பெண்ணின்
திருமணத்தில்
அட்சதை தூவிக் கொண்டிருப்பாள்
மண வயது கடந்த
மங்கை யொருத்தி!

முதலாளி மகள்
தேர்ச்சி அடைந்ததற்காக தந்த
இனிப்பை ருசித்துக் கொண்டிருப்பாள்!
வேலைக்கார
சிறுமியொருத்தி.

ஆசிரியரின்
களைப்பிற்காக
தேநீர் வழங்கிக் கொண்டிருப்பான்.
கற்க இயலா
சிறுவன் ஒருவன்.

பண்ணையாரிடம்
கை நாட்டில்
கடன் வாங்கி ஏமாந்துக் கொண்டிருப்பான்!
ஏழை
விவசாயி யொருத்தன்.

ஒரு நாள் எரிப்பதற்கு
தினமும்
எரிந்துக் கொண்டிருப்பான்!
பட்டாசுத் தொழிற் சாலையின்
சிறுவன் ஒருத்தன்.

ஏமாந்த மக்களே
மறுபடியும்
ஏமாந்துக் கொண்டிருப்பார்கள்!
ஓட்டுச் சாவடிகளில்
மொத்தமாய்.

கதிர்மொழி

More articles by கதிர்மொழி

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.