Ladyஎன்
இதயத்துள் நுழைந்த காற்று
வெளியில் வரமறுக்கிறது
உன் கனவுகள் சுமந்த தென்றலாய்
என்னை உயிர்வாழ வைக்கிறது.

பெண்ணே!
நிலவின் குளிர்மையும்
பனியின் மெல்லிய வருடலும்
ஏன்
பூவில் வண்டமர்ந்து தேனேடுக்கும்
மென்மையை விட
உன் நினைவுகள் என்னை
மென்மையாக்கி விடுகின்றதே…
ஏன்?

நான் காத்திருக்கிறன் - ஒரு
காதலின் வருகைக்காக..

என் காதல் உன்னுடன்
ஒரு முறையேனும் வாழவேண்டும்

அலையெழுந்து கரைமோதுகையில்
எழுகின்ற நுரையின்
உயிர்வாழும் காலமாவது
நீயும் நானும் உயிர் வாழவேண்டும் 

அ.பவுலஸ் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.