Fenixமனம் முழுதும் ரணமாய்
மறுமுறை அந்த வார்த்தைகளை
நினைவுகூர்கின்றேன்....
"மறந்துவிடு என்னை"
"மரித்துவிடு நீ"
என்று சொல்லியிருந்தால்கூட
மயங்கி இருக்கமாட்டேன்.

மனது ஒன்றும்
மாயக்கண்ணாடி அல்ல
நினைத்தால்
நினைத்த நேரம் மாற்றி
முகம் பார்க்க,
மரித்த என்னை உயிர்ப்பித்தாய்
இன்றுதான் புரிந்தது,
உண்மையில் நான் ஒரு
பீனிக்ஸ் பறவைதான் என்று,
என்றும் தொடரும் என்
பயணம் உனை நோக்கி,
மரிப்பினும் மறுபடி
உயிர்த்தெழுந்து பறப்பேன்
உன்னைத்தேடி, உன் அருகில்.
என் சாம்பலிலும்
இருக்கும் உன் சலனம்,
மீண்டும் என்னை எரிப்பாயா?
உயிர்ப்பேன்
மீண்டும் உன் நினைவுகளால்....

ஸ்ரீஷிவ் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.