
எதுவும் அங்கில்லை
அவை ஒரு சூறாவளியிலோ
அல்லது அரசாங்க ஆணையாலோ
இடம் பெயர்ந்திருக்கலாம்!
உழைத்து களைக்கவும்
களைத்து துயிலவும்
அழைத்து உபசரிக்கவும்
அமைந்த விலாசமற்றுமன்று
அது உணர்வுகள்
உறையும் கூடு!
என்னுடையதென எல்லாவற்றையும்
எடுத்து வந்திருக்கிறேனா
எண்ணிக்கை பார்த்தால்
விட்டு வந்தவை ஏராளம்
அவை பாதுகாப்புணர்வாக,
ஸ்பரிசமாக, வாசமாக
காற்றில் இறகென
அலைந்திருக்கும்!
- பாஷா (