
ஏங்குமென்கிறபோது
அட்சயப்பாத்திரங்கள்
அருகருகே
அடுக்கப்பட்டிருந்தும்
திரைவிலகும்
திசையிற்கழியும்
கத்தை கத்தையான
காலம்
அந்திமக்குமரிகள்
கூடியடிக்கும்
கும்மிகளுக்கிடையில்
சிதறித் தெறிக்கும்
காற்று பிசிரென
கணபொழுதுளில்
சறுக்கித்தான் போகிறதெம்
உச்சவரம்பின்
பிடிவாதங்கள்
- கவிமதி, துபாய்