Eroticஆனந்த தாண்டவத்தில் 
சக்தியும் பரமனும்
ஆடைகள் துறந்து

விசுவரூபமெடுக்கின்றன
விரைத்தக் குறியும் விரிந்த யோனியும்
காணக்கிடைக்காத காட்சிப் பேரமைதியில்
மண் வீழ்ந்து வணங்குகிறார்கள்
செம்மொழியின் நவீனர்கள்
நிர்வாணத் தரிசனப் பரவசத்தில்
பெருகி விழிக்கின்றன படைப்பிலக்கியங்கள்
வாசித்த சக்திக்கு பூடகப் புன்னகை
'பார்வையற்றோரின் யானைக்காணல்'
அர்த்தம் பொதிந்த புன்முறுவலோடு
அழைக்கிறார் சிவன்
மெல்லிய நாணத்தோடு நகர்கிறாள் அம்பிகை

அர்த்தநாரியின் அவதாரப் பெருந்தீயில்
பற்றி எரிகின்றன படைப்புகள்

அன்பாதவன், மும்பைஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.