தேர் வரா வீதியெங்கள் வீதி

தேர்போலும்
வந்ததே கிடையாது பேருந்து
ஒரே ஒரு முறை பிளசர் வந்தது
செத்துப்போன லதாவை இறக்கிவிட
அதுமுதல் பிளசரின் வண்ணம்
கருப்பென்று சொல்கின்றன
குதியாட்டம் போட்ட குழந்தைகள்
டிராக்டரோ லாரியோ
ஆட்களை ஏற்றிப்போக வருவதுண்டு
மாநட்டுப் பந்தலுக்கு
மெய்யாலுமே தெரியாது
ஏரோப்பிளேனுக்கும்
எலிகாப்படருக்குமுள்ள வித்தியாசம்
எதுவும் வரத் தயங்குகிற எங்களூருக்கு
ஏன் எப்போதும் வந்து தொலைக்கிறது
பஞ்சமும் சாதிப் பிணக்கும்
- யுகபாரதி இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.