சாலை யோரத் திலோர்
மனிதப் பிணம்!
ஈக்களும் எறும்புகளும்
அதனைச் சுற்றிலுமே!

சாலையில் சென்றிடும்
மனித யினமதைக்
கண்டும் காணாமல்
போகுது பார்!

சற்றே தூரத்திலோர்
காக்கைப் பிணம்!
அங்கே கூடிக்கரையிது
காக்கை இனம்!

பசுவதைக் கெதிராய்
ஓர் இயக்கம்!
தெரு நாயைக் காக்க
ஓர் இயக்கமென
பிராணிகளைக் காக்கப்
பல இயக்கம்!

மனிதனைக் காக்க
ஏனில்லை?

சாலையிலே ஓர்
விபத்தென்றால்
முதலுதவிக்கு மங்கு
நாதியில்லை!

தெருவிலே யொருவனுக்குக்
கத்திக் குத்து....
அடுத்த நொடியிலங்கு
எவருமில்லை!

துடிதுடித்துச் சாகும்
மனிதன் வாயில்
குவளை நீரூற்றுதற்கும்
எவருமில்லை!

ஆறறிவு பெற்ற
மனிதராம் நாம்!!
எங்கே தொலைத்தோம்- நம்
இதயத்தை?

இமாம்.கவுஸ் மொய்தீன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.