இம்மரங்கள்
ஊரெல்லாம் கையேந்தி ஒன்றுமற்று
தன் மடியில் தலைசாய்க்கும்
பசித்த ராப்பிச்சைக்காரனின்
எதிர்பார்ப்பற்ற பின்னிரவில்
தாயென நிரப்பலாம்
ஓர் கனி

அல்லது
முக்கியமற்ற அவனின் மரணக்காலையில்
எவரும் வரும் முன்னால் உதிர்க்கலாம்
சில மலர்கள்

அல்லது
தவறி கீழ்விடலாம்
ஒரு சில சருகுகளேனும்

பாலு மணிமாறன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.