தன்னே னன்னானே
தன, தன்னே னன்னானே
தன்னே னன்னானே
தன, தன்னே னன்னானே

சூரியரே சந்திரரே
சாட்சி சொல்லும் நட்சத்திரரே
சூரியரே சந்திரரே
சாட்சி சொல்லும் நட்சத்திரரே

உங்களுக்கு நன்றி சொல்ல
பொங்கப்பானை வைத்தோமைய்யா
தங்கமான தருணத்திலே
எங்க குறை தீருமய்யா

(தன்னே னன்னானே..)

தங்கப்பானை வைக்கவில்ல
தாமிரத்துக்கு வசதியில்ல
மண்பானை வைத்தோமைய்யா
மனமார படைத் தோமைய்யா

பால் வெள்ளை மனசுமைய்யா
வெல்லம் அதன் குணமுமைய்யா
நெல்லரிசி எம் உயிருமைய்யா
கலந்துமக்கு கொடுத் தோமைய்யா

(தன்னே னன்னானே..)

வயக்காட்டில வேல செஞ்சு
வளம் பாத்த பூமி அய்யா
வாழ்ந்துகெட்ட சனமுமைய்யா
வெள்ளாமை மறந்து எங்க புள்ள

வெளிநாடு போகுதைய்யா
வெய்யிலிலே காயுதைய்யா
வெத நெல்லும் உணவானா
வெவசாயம் எங்கே அய்யா?

(தன்னே னன்னானே..)

பொன்னியை மறந்தைய்யா
பாசுமதி கேட்குதைய்யா
பெற்றவர தொலச்சதைய்யா
மற்றவர் பின் அலையுதைய்யா

காசு பணம் கேட்கவில்ல
காரு பங்களா தேவயில்ல
காலத்தில் மழ பெய்ஞ்சா
கடன் கட்ட உதவுமைய்யா !

(தன்னே னன்னானே..)

பாலசுப்ரமணியன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It