விழியில் நீர் நிரம்ப
கண்ணீர் வடிக்கின்றாய்
வற்றாத ஜீவநதி போல....
தனிமனிதனை விரும்பாமல்
தனிமையை விரும்புகின்றாய்
கவிஞன் போல....

வகை வகையாய் வலையல் போட்டான்
வண்ணம் வண்ணமாய் பொட்டும் வைத்தான்
வருட கணக்கில் அழ வைக்கவா?

வாழ்வதற்கெல்லாம் வசதி வேண்டாம்
வலிமையான இதயம் போதும்!
மறுவாழ்வை தேடம்மா
மறுபிறவி நிச்சயமில்லை!

வங்கக்கடல் பொங்கிய போது
வாழமீன் போல சுருண்டுபோன
மனிதர்கள் எத்தனையோ நினைவில்லை

வாழத்தான் பிறந்திருக்கிறோம்
வழிந்தோடும் கண்ணீரை துடைத்துக்கொண்டு
வலிமையுடன் வாகைசூட போராடு
நடப்பவையெல்லாம் நம்மில் இல்லை

நம்பிக்கையோடு எழுந்திரு
நலமோடு வாழ்
நாட்டையே வெல்.!

Comments

1 comment

1
கி.பிரபா
நான் பிறந்தவுடன் இன்பம் கொண்டாள் தாய். வளர்ந்தேன். வாழ்ந்தேன் சில காலம் மட்டுமே! பிறப்பியம் எனும் சாதகம் பார்த்தார்கள் மாப்பிள்ளை வீட்டார். பொருத்தம் பத்துக்கு எட்டு இருந்ததாம்! இல்லாத இரண்டு எவையோ? பொட்டிட்டுப் பூச்சூடி வளையல்கள் அணிந்து பட்டுடுத்திப் பாங்காய் சென்றேன் படை சூழ வாழ்வேன் என நம்பிக்கையுடன். இன்னும் சொன்னால் மனம் கொள்ளா கனவுகளுடன்! நம்பிக்கையும் போனது; கனவுகளும் போயின.கிடைத்தன எதிர்பாரா நிலையில் பல! அவைதான் வசவுகள்.விதவையானேன். எப்படி? அவன் வேறொருத்தியுடன் எனில் கூட சற்று சிந்திருப்பேன். ஆனால் ஊரறிய என்னுடன். திக்குக்கு ஒன்றென எண்ணில் தெரியாது. அதை உணர்த்தவும் முடியாது."நல்லவன்" அவன். அவனுக்கெனப் பெயர் இருந்தாலும் அது கல்விச் சான்றிதழிலும் அவனைத் தெரிந்ததாகக் காட்டுபவர்களிடமு மட்டுமே! பொட்டுண்டு' பூ உண்டு. பட்டுண்டு; அவன் தேவையை நிரப்பவதற்கு மட்டுமே அவன் பக்கத்தில் உண்டு. கெட்டேனா? கெடுக்கப்பட்டேனா? "விதவை" தானே அவன் இருந்தாலும் இல்லையெனினும் நான்.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.